;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (19.04.2018)

0

ஹொரணை தொழிற்சாலையின் முகாமையாளர் கைது

ஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அத்தொழிற்சாலையின் முகாமையாளரை ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மே முதலாம் திகதி, அரச, வங்கி, வர்த்தக விடுமுறை இரத்து.!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்­ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அடுத்து மே தின கொண்­டாட்­டங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

அதற்கமைய மே தின கூட்­டங்கள், ஊர்­வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்­தக விடு­முறை தின­மாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்; ஜனாதிபதியும் பங்கேற்பு

பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் தலைமையில் பக்கிங்ஹாம் மாளிகையில் இடம்பெற்றது.

53 நாடுகளின் அரவ தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதில் பங்கேற்றுள்ளார்.

“பொதுவான எதிர்காலம்” எனும் தொனிப்பொருளில் இன்று ஆரம்பமான பொதுநலவாய அமைப்பின் 25வது அரச தலைவர்கள் மாநாட்டில் சுபீட்சம், பாதுகாப்பு, சமநிலை, பேண்தகு தன்மை போன்ற விடயங்களின் கீழ் பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் இலக்குகளை அடைதல் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இறுதியாக இடம்பெற்ற மோல்டா அரசு தற்போது பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வகித்து வருவதுடன், இம்முறை மாநாட்டின் போது அமைப்பின் தலைமைத்துவம் ஐக்கிய இராச்சியத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும், பிரித்தானிய நேரப்படி இன்று பிற்பகல் 4.00 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*