;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (20.04.2018)

0

மரத்தில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு!!

மரத்தில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொட்டிங்ஹேம் தோட்டத்தில் நேற்று மாலை நடந்தது என்று மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

51 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான எம்.கந்தசாமி என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு விறகுகளை வெட்டுவதற்கு மரத்தின்உச்சியில் ஏறிய நிலையில் தவறி கீழே விழுந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மாட்டிறச்சியுடன் ஒருவர் கைது

அனுமதிப் பத்திரம் இன்றி விற்பனைக்காக வைக்கப்பட்டடிருந்த 175 கிலோ மாட்டிறைச்சியுடன், ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

மாடு வெட்டப் பயன்படுத்திய ஆயுதங்களும் இதன்போது மீட்கப்பட்டது.

இச் சம்பவம் நேற்று பொகவந்தலாவ, பொகவானை தோட்டபகுதி கொங்ரீட் பாலத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பதிவு செய்யவும்!!

வலி .வடக்­கில் கடந்த 13 ஆம் திகதி விடு­விக்­கப்­பட்ட மயி­லிட்­டி-­கட்­டு­வன் வீதி­யின் மேற்­குப் புற­மா­க­வுள்ள ஜெ/240 தென்­ம­யிலை, ஜெ/246 மயி­லிட்டி வடக்கு, ஜெ/247 தையிட்டி கிழக்கு ஆகிய கிராம அலு­வ­லர் பிரி­வு­க­ளில் உள்ள பொது­மக்­கள் தமது காணி­களை ,உட­ன­டி­யாக தத்­த­மது கிராம அலு­வ­ல­ரி­டம் பதிவு செய்­யு­மாறு தெல்­லிப்­ப­ழைப் பிர­தேச செய­லர் ச.சிவஸ்ரீ கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

காணி­களை துப்­பு­ரவு செய்­யும்­போது வெட்­டிய மரங்­களை அகற்­று­வ­தற்­காக பிர­தேச செய­ல­கத்­தின் அனு­ம­தி­யைப் பெற்றே அகற்ற வேண்­டு­மெ­ன­வும் மீறு­வோர் பொலிஸா­ரின் சட்ட நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வார்­கள் என­வும் அவர் அறி­வித்­துள்­ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*