;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (20.04.2018)

0

பாதாள குழுவைச் சேர்ந்த இருவர் கைது

தொடலக பிரதேசத்திலிருந்து, பாதாள குழுவைச் சேர்ந்த இருவரை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இன்று (20) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், பாரிய போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களெனத், தெரியவந்துள்ளது.

​சந்தேக சபர்களிடமிருந்து கைக் குண்டு ஒன்று, ஹெரோய்ன் போதைப்பொருள் என்பவற்றை பொலிஸ் அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

24 மணிநேரத்தில் 7 பேர் பலி
கடந்த 24 மணிநேரத்துக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இருவரும், அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கோமரன்கடவல, அத்துருகிரிய, ஆனமடுவ, மாரவில, கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மாரவில பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில், 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளாரெனவும், தெரிவிக்கப்படுகிறது.

அர்ஜூன மஹேந்திரனை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், அர்ஜூன மஹேந்திரனை கைது செய்ய, இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் கையொப்பத்துடன், பொலிஸ் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில், அர்ஜூன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்!!

ஆலய பூசையை மேற்கொள்ள அரை நாள் விடுமுறை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கெம்பியன் கிழ் பிரிவு தோட்ட மக்கள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை தொழிலுக்குச் சென்ற தொழிலாளர்கள் தோட்ட ஆலயத்தில் பூசை ஏற்பாடுகள் இருப்பதானால் அதற்காக அரை நாள் விடுமுறை வழங்க பட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

தெற்கு மறுப்புத் தெரிவித்த தோட்ட உதவி முகாமையாளர் தோட்ட தொழிலாளர்களை நாளை முதல் தொழிலுக்கு வரவேண்டாம் எனக் கூறியுள்ளார்.

அதனையடுத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விடயம் குறித்து மலையக அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்தி தங்களுக்கான உரிய தீர்வைப் பெற்றுதருமாறு கோரிக்கை விடுத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five − 3 =

*