பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (21.04.2018)

பொரளை – சிறிசர உயன பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைபொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து 10 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோய்ன் போதைபொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல்மாகாண போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தார்.
இன்று பிற்பகல் மழை பெய்யக்கூடும்!!
நாட்டில் சில மாகாணங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர்இடியுடன் மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை அல்லது
இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் தென் கரையோர பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெப்பமான காலநிலை தொடர்ந்து நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை முறையை கணினி மயப்படுத்த நடடவடிக்கை!!
பரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை கணினி மயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்காக மலேசியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தின் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக இலங்கையில் இருந்து குழுவொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் மூத்த விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழுவினரே அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை முறைமையை இணையமயப்படுத்த நடவடிக்கை
பரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்காக மலேசியாவின் புத்ரா பல்கலைகழக்கத்தின் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவதற்காக இலங்கையில் இருந்து குழுவொன்று அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் 12 அதிகாரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் அடங்கிய குழு, அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
இந்தக் குழுவினர், நாளை (22) நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது