;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (21.04.2018)

0

35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டத்தடை

இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்தவேண்டு என தெரிவித்துள்ளார்.

கத்தி குத்துக்கிலக்காகி ஒருவர் பலி!!!

ராகம – மஹர பிரதேசத்தில் இனந்தெரியாத சிலர் கூரிய ஆயுதங்களால் இருவரை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகியள்ளார் .

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடற்கரைப் பிரதேச சட்டவிரோத கட்டுமானங்கள் முதலாம் திகதி முதல் அகற்றப்படும்…..

கடற்கரைப் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டவிரோத கட்டுமானங்களையும் மே மாதம் முதலாம் திகதி முதல் அகற்ற நடவடிக்கை எடுக்க உள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துன்புறுத்தல்கள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்தர கீர்த்தி இதனைத் தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிற்சாலை உரிமையாளர் இழப்பீடு!!!

ஹெரணை – பெல்லப்பிட்டிய இறப்பர் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொழிற்சாலை உரிமையாளர் வழங்கிய இழப்பீட்டை குடும்பத்தார் நிராகரித்துள்ளனர்.

பாணந்துறை வைத்தியசாலைக்கு வந்த தொழிற்சாலை உரிமையாளர் தமக்கு 50,000 ரூபா இழப்பீட்டை வழங்க முயற்சித்ததாகவும், எனினும் தானும் ஏனையவர்களும் குறித்த பணத்தை பெற்றுக்கொள்ளவில்லை என உயிரிழந்த தொழிலாளர் ஒருவரின் உறவினர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், குறித்த இறப்பர் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரிக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தொழில் ஆணையாளர் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார்.

மேலும் தொழிற்சாலையில் பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடிக்குமாறு, அதன் நிர்வாக அதிகாரியிடம் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆலோசனை வழங்கியதாகவும், எனினும் அவை கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை இறப்பர் தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தறங்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + eleven =

*