;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (21.04.2018)

0

புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பெருந்தொகையான பணப்பரிமாற்றம்: இலங்கை வங்கி

கடந்த புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் பெருந்தொகையான பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை வங்கியின் தன்னியக்கப் பணப்பரிமாற்றம் மற்றும் பணக்கொடுக்கல் வாங்கல்கள் மூலம் ஐயாயிரத்து 400 கோடி ரூபா பெறுமதியான கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை வங்கியின் ஏரிஎம், சிடிஎம் வலைப்பின்னல்களில் 930 இற்கு மேற்பட்ட வலைப்பின்னல் செயற்பாட்டுக் கட்டமைப்புக்கள் உள்ளன. இதேவேளை இவற்றின் மூலம் பெருந்தொகை பணம் பரிமாறப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என இலங்கை வங்கி அறிவித்துள்ளது.

சீனத்தூதுவருடன் கடற்படைத் தளபதி சந்திப்பு

இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவானுக்கும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக, இலங்கை கடற்படைத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் குறித்த சந்திப்பில் சீனத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும், கேணல் ஷு ஜியான்வெய்யும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஊட்டச்சத்து உயர்வு நிலையில் உள்ளது: அனில் ஜாசிங்க

இலங்கையின் ஊட்டச்சத்து மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாக கணிப்புக்கள் குறிப்பிடுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு சுகாதார திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை குழந்தைகளின் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்துவது தொடர்பில் பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றதென சுட்டிக்காட்டினார்.

ஆனால் சில ஊடகங்கள் சுகாதார அறிக்கையை தவறாக புரிந்துக்கொண்டு தகவலை வெளியிடுகின்றனரென அவர் கவலை தெரிவித்துள்ளார்.

நிலம் தாழிறக்கம்; 12 பேர் வௌியேற்றம்

பண்டாரவளை லியன்கஹவெலக்கு சொந்தமான பலகல தோட்டத்தில், இன்று (21) ஏற்பட்ட நிலம் தாழிறக்கம் காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரை பாதுகாப்பாக வௌியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஈ.எம். உதயகுமார தெரிவித்தார்.

மேலும், இந்நிலம் தாழிறக்கம் காரணமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அப்பகுதியில், மழையுடனான காலநிலை நிலவாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு நிலம் தாழிறங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது குறித்து ஆராயவென தேசிய கட்டட ஆராய்ச்சி அதிகாரிகள் வருகைதரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

‘ஐ.தே.கவின் தலைமைத்துவத்துக்கு ரணிலே பொருத்தமானவர்’

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்துக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குறித்து, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 11 =

*