;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (21.04.2018)

0

இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்

றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

றாகம, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதுதவிர, குருணாகல், யன்தம்பலாவ பிரதேசத்திலும் நேற்றிரவு ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

56 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச் சந்தேகநபரை கைது செய்வதற்காக குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சிங்கள பௌத்த வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள் வேலைத்திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் கிராமிய மட்ட மக்கள் இருப்பதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க கூறியுள்ளார்.

நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அனைத்து தரப்பினருக்கும் தௌிவாக விளங்கும் வகையிலான மாற்றம் ஒன்று கட்சியில் ஏற்படுத்த வேண்டு என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளிட்டவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

அதேநேரம் சிங்கள பௌத்த வாக்குகள் சிதறி உள்ளதாகவும், அந்த சிங்கள பௌத்த வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 30ம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள குறைபாடுகளை ஏற்றுக் கொள்கிறேன்

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

மக்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்கத்தில் சில மாற்றங்களை செய்துவிட்டு மக்களிடம் செல்ல வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியான எமக்கு வருத்தப்பட வேண்டி ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும் அமைச்சரவைக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் கெட்ட நேரமாக இருந்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 7 =

*