;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-6.!! (21.04.2018)

0

16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்

காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனை மேற்கொண்டபோது 16 உணவக உரிமையாளர்கள் சிக்கினர்.

நுகர்வோருக்கு பொருத்தமற்ற முறையில் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உணவுகளை வைத்திருந்த 16 உணவகங்கள் மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாட்டின் சகல பிரதேசங்களிலும் உள்ள உணவகங்கள் மீது திடீர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய வரைப்படம் விரைவில்

முழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படத்தை இந்த ஆண்டில் வெளியிடவுள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர திட்டத்தினால் வரைப்படத்தில் 2.69 சதுர கிலோமீற்றர் பரப்பளவு அதிகரித்துள்ளதாக தலைவர் பீ. என். பீ. உதயகாந்த தெரிவித்தார்.

துறைமுக நகர திட்டம் காரணமாக மாற்றமடைந்துள்ள கொழும்பு வரைப்படத்தை அச்சிடும் பணிகளை இந்த மாதத்துக்குள் நிறைவுக்கு கொண்டுவர உள்ளதாக நில அளவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் புதிய வரைபடத்துக்கு அமைய, சிலாபம் கடற்பரப்பு பகுதியில் குறைவுத் தன்மையும், தென் மற்றும் கிழக்கு கடற்பரப்பில் சில மாற்றங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். .

குறித்த மாற்றங்களுடன் முழுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் வரைப்படத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் வெளியிட உள்ளதாக நில அளவைத் திணைக்கள தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சு.கா அமைச்சர்கள் சபாநாயகருக்கு கடிதம்

நல்லாட்சியில் இருந்து வௌியேறிய சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் 16 பேரும், நாடாளுமன்றத்தில் எதிரணி ஆசனத்தில் அமர்வதற்கான அனுமதியைக் கோரி, சபாநாயகரிடம் கடிதமொன்றை கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 8ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது, தான் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவினர் எதிரணி ஆசனத்தில் அமரவுள்ளதாக, டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அழகுசாதனங்கள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

அழகுசாதனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் பதிவுசெய்தல் தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஊடாக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அழகுசாதனங்களை பதிவு செய்தலை கட்டாயமாக்குவதுடன், அது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதென, அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழு, அழகுசாதன வகைகளைப் பதிவுசெய்வதற்காகச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்வதுடன், அழகுசாதன வகைகளின் தன்மையைப் பரிசோதிக்கும் எனவும் அந்த ஆணையம் அறிவித்துள்ளது.

அத்துடன், மனிதத் தோலுக்கு ஒத்துக்கொள்ளும் அழகுசாதன வகைகளை மாத்திரம் பதிவுசெய்வதற்கு, இந்தக் குழுவின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 15 =

*