;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-7.!! (21.04.2018)

0

சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு!!

நாட்­டின் பலபகு­தி­க­ளில் சமை­யல் எரி­வா­யுவுக்கான தட்­டுப்­பாடு நில­வு ­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது.

சமை­யல் எரி­வா­யுக்­களை விற்­பனை செய்­யும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு 2.5, மற்­றும் 12.5 கிலோ­கி­ராம் சிலிண்­டர் ­கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே கிடைக்­கப்­பெ­று­வ­தா­க­வும் இத­னா­லேயே தட்­டுப்­பாடு நில­வு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 15 ஆம் திகதி முதல் இந்த நிலை ஏற்­பட்­டதாகக் கூறப்­ப­டு­கின்­றது.
சமை­யல் எரி­வாயு விற்­பனை செய்­யும் நிறு­வ­னங்­கள் இதனை மறுத்­துள்­ளமை குறிப்­பி­டத் ­தக்­கது.

கண்டியில் நடந்தேறியது திட்டமிட்ட அரசியல் கலவரம்!!

கண்­டி­யில் இடம்­பெற்­றது மதக் கல­வ­ர­மல்ல. திட்­ட­மிட்­டப்­பட்ட அர­சி­யல் கல­வ­ர­மா­கும். இரா­ணுவ மற்­றும் பொலி­ஸார் உள்­ளிட்ட அதி­கா­ரி­கள் தங்­கள் கட­மை­களைச் சரி­வர நிறை­வேற்­றா­மையே கண்­டிக் கல­வ­ரம் உச்­ச­ம­டைந்­த­மைக்குக் கார­ண­மா­கும் என்று அமைச்­சர் சுவா­மி­நா­தன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சில கிளர்ச்­சி­யா­ளர்­கள் தங்­கள் சுய இலா­பங்­க­ளுக்­காகக் கிளர்ச்­சி­க­ளில் ஈடு­பட்டு மதச் சாயம் பூசி ஒற்­று­மை­யா­க­வுள்ள எமது மக்­களைப் பிரிப்­பதைத் தவிர்க்க வேண்­டும்.

இந்­துக்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் சிங்­க­ள­வர் களும் ஒற்­று­மை­யா­கவே உள்­ள­னர். இந்­துக்­க­ளின் ஆல­யங்­க­ளுக்கு, முஸ்­லிம்­க­ளும் வருகை தரு­கின்­ற­னர். அவர்­க­ளின் வழி­பாட்­டி­டங்­க­ளுக்கு ஏனை­ய­வர்­க­ளும் செல்­கின்­ற­னர். மத ரீதி­யான ஓர் கல­வ­ரம் ஏற்­பட வாய்ப்­பில்லை.

இது ஓர் திட்­ட­மி­டப்­பட்ட அர­சி­யல் கிளர்ச்­சியே ஆகும். ஒரு சில­ரால் மேற்­கொள்­ளப்­ப­டும் கிளர்ச்­சி­க­ளுக்கு மதச்­சாயம் பூச வேண்­டாம்.
இவ்­வா­றான கூட்­டங்­ களை நடத்­து­வ­தால் மாத்­தி­ரம் இப்­ப­டி­யான பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­யாது.

இரா­ணு­வம் மற்­றும் பொலி­ஸார் உட்­பட உரிய அதி­கா­ரி­கள் தங்­கள் கட­மை­களை நிறை­வேற்றத் தவ­றும் பட்­சத்­தி­லேயே இவ்­வா­றான பிரச்­சி­னை­கள் உச்ச நிலை­ய­டை­யும். சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­த­லி­லும் தங்­கள் கட­மை­களைச் சரி­வரச் செய்­வ­தி­லும் இரா­ணு­வம் மற்­றும் பொலி­ஸார் உள்­ள­டங்­கிய உரிய தரப்பு அதி­கா­ரி­கள் பின்­னிற்கக் கூடாது -– என்றார்.

ஐ.தே.கவின் பதவிகளுக்கு 26 இல் புதிய முகங்கள்!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலை­மைத்­து­வப் பத­வி­யைத் தவிர்ந்த ஏனைய அனைத்­துப் பத­வி­க­ளை­யும் மையச் செயற்­கு­ழு­வின் வாக்­கெ­டுப்­பின் மூலம் தீர்­மா­னிக்க முடி­வு­செய்­யப்­பட்­டது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பத­வி­கள் குறித்து இறு­தித் தீர்­மா­னம் எடுக்க நிய­மிக்­கப்­பட்ட 12 பேர் அடங்­கிய குழு பரிந்­து­ரைக்­குக்­கும் பெயர்­க­ளின் பிர­கா­ரம் வாக்­கெ­டுப்­பின் மூலம் பத­வி­களை நிர்­ண­யிக்க முடி­வு­ செய்­யப்­ப­ட­வுள்­ளது.

எதிர்­வ­ரும் 26ஆம் திகதி கூட­வுள்ள கட்­சி­யின் மையச் செயற்­கு­ழு­வில் மேற்­படி சிபா­ரி­சு­களை 12 பேர் அடங்­கிய குழு முன்­மொ­ழி­ய­வுள்­ளது. அன்­றைய தினம் வாக்­கெ­டுப்­பின் மூலம் தீர்­மா­னிக்­கப்­ப­டும் பத­வி­களை ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தொழி­லா­ளர் தினக் கூட்­டத்­தில் நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

கூடிய அதி­கா­ரத்­து­டன் உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள கட்­சி­யின் பொதுச் செய­லர் பத­விக்கு அதி­க­மான போட்டி நில­வு­கின்­றது. அமைச்­சர்­க­ளான அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம், நவீன் திசா ­நா­யக்க மற்­றும் இம்­தி­யாஸ் மார்க்­கர் ஆகி­யோ­ரின் பெயர்­கள் பொதுச் செய­லர் பத­விக்குப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன.

அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சமே பொதுச் செய­ல­ராக நிய­மிக்­கப்­ப­டும் வாய்ப்பு அதி­க­ள­வில் காணப்­ப­டு­கின்­றது என்று அறி­ய­மு­டி­கின்­றது.

அரச கட்டுப்பாட்டிலிருந்து இரு திணைக்களக்களை விடுவிக்கத் திட்டம்!!

தபால் திணைக்களம் மற்றும் தொடருந்துத் திணைக்களம் என்பவற்றை அரச கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சுயாதீன நிர்வாக சபைகள் கொண்ட கூட்டுத் தாபனங்கள் இரண்டாக மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

அமைச்சரவை உப குழுவொன்றின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை விரைவாக நிறைவேற்ற அரசு எதிர்பார்த்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 1 =

*