;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (22.04.2018)

0

அம­ர­வீர, துமிந்­த­வின் பத­வி­கள் பறி­போ­குமா?..!!

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் அமைச்­சர் மகிந்த அம­ர­வீர, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் அமைச்­சர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோரை பொதுச்­செ­ய­லா­ளர் பத­வி­க­ளிலி­ருந்து விலக்­க­ வேண்­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­துங்­கள்.

இவ்­வாறு ஐ.ம.சு.மு., சு.கா. ஆகிய கட்­சி­க­ளின் தலை­வ­ரான அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் தொடர்ந்­தும் கடும் அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கி­றது.

சு.க. – ஐ.தே.க. –மகிந்த அணி மோதல் இன்­னும் நீடிக்­கின்­றது..!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த மைத்­திரி பக்­க­முள்ள சு.க. உறுப்­பி­னர்­கள் 16 பேரே இவ்­வாறு வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.

இரு­வ­ரின் பத­வி­கள் மே தின நிகழ்­வுக்கு முன்­னர் பறிக்­கப்­ப­டா­வி­டின் சு.கவின் மே தினக் கூட்­டத்தை புறக்­க­ணிப்­போம் என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரா­கப் பொது எதி­ரணி நாடா­ளு­மன்­றில் கொண்­டு­வந்­தி­ருந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக சு.கவில் 16 பேர் வாக்­க­ளித்­தி­ருந்­த­னர். அது அந்­தக் கட்­சி­யில் பெரும் பனி­போ­ராக முற்­றி­யுள்­ளது.

மைய செயற்­கு­ழு­வில் எடுக்­கப்­ப­டும் தீர்­மா­னத்­துக்கு இரு பொதுச் செய­லா­ளர்­க­ளும் காது கொடுப்­ப­தில்லை எனக் குற்­றச்­சாட்­டு­கள் தொடர்ந்து சுமத்­தப்­பட்டு வரு­கின்­றன. செய­லா­ளர்­கள் இரு­வ­ரும் தமது பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்­டும் என்று தொடர் அழுத்­தம் கொடுக்­கப்­ப­டு­கி­றது.

எனி­னும், இரு கட்­சி­க­ளி­ன­தும் தலை­வர் என்ற அடிப்­ப­டை­யில் அர­ச­த­லை­வர் எடுக்­கும் தீர்­மா­னத்­துக்கு மாத்­தி­ரமே தாங்­கள் கட்­டுப்­ப­டு­வோம் என்று மஹிந்த அம­ர­வீ­ர­வும், துமிந்த திஸா­நா­யக்­க­வும் கூறி­யுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க­ வுக்கு எதி­ரா­கப் பொது எதி­ரணி கொண்­டு­வந்­தி­ருந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தோல்­வி­ய­டைந்­த­தால் தேசிய அர­சில் தொடர்ந்து நெருக்­க­டி­க­ளும், கருத்து முரண்­டு­பா­டு­க­ளும் நீடித்து வரு­கின்­றன.

இத­னால் அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்பு ஒத்­தி­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. சு.கவில் ஏற்­பட்­டுள்ள குழப்­ப­க­ர­மான சூழ்­நி­லையே அமைச்­ச­ரவை மறு­சீ­ர­மைப்­புத் தொடர்ந்­தும் ஒத்­தி­வைக்­கப்­பட்டு வரு­வ­தற்கு முக்­கிய கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது.

ரணி­லுக்கு எதி­ராக வாக்­க­ளித்த சு.கவின் 6 அமைச்­சர்­க­ளின் பத­வி­க­ளுக்கு ஐ.தே.கவில் இருந்­தும், சு.கவில் இருந்து 6 மூத்த உறுப்­பி­னர்­களை நிய­மிக்க இணக்­கம் காணப்­பட்­டுள்­ளது. எனி­னும், ஐ.தே.க. கோரும் சமுர்த்தி மற்­றும் தொழில் அமைச்­சு­களை வழங்க முடி­யாது என்று சு.க. கூறி­யுள்­ளது.

இவ்­வாறு தேசிய அர­சில் நெருக்­க­டி­கள் தொடர்ந்­து­வ­ரும் நிலை­யில், நாடா­ளு­மன்று எதிர்­வ­ரும் மே மாதம் 8ஆம் திகதி புதிய கட­மை­களை ஆரம்­பிக்­கும் என்று அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள அறி­விப்­புக்கு எதிர்க்­கட்­சி­கள் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன.

எதிர்­வ­ரும் 8ஆம் திகதி அர­சின் புதிய கொள்­ளை­களை அர­ச­த­லை­வர் வெளி­யி­டு­வா­ரா­யின் அத­னைத் தோற்­க­டிப்­ப­தற்­கும் பொது எதி­ரணி தீர்­மா­னித்­துள்­ளது.

புதிய அர­சொன்று அமைக்­கப்­பட்ட பின்­னர் அதன் கொள்­கை­கள் அல்­லது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் அல்­லது வரவு – செல­வுத் திட்­டம் தோல்­வி­ய­டைந்­தால் அர­ச­மைப்­பின் 48ஆவது சரத்­தின் பிர­கா­ரம் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட வேண்­டும். அல்­லது 70ஆவது சரத்­தின் பிர­கா­ரம் அரச தலை­வ­ரால் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்டு பொது தேர்­த­லுக்­கான அழைப்பு விடுக்­கப்­பட வேண்­டும்.

எனவே, அர­ச­த­லை­வர் எதிர்­வ­ரும் 8ஆம் திகதி தேசிய அர­சின் புதிய கொள்­கை­களை வெளி­யிட்­டால் அதனை தோல்­வி­ய­டை­யச் செய்ய, முன்­னாள் அர­ச­த­லை­வர் மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யி­னர் பேச்சு நடத்­தி­யுள்­ள­னர்.

ஐ.தே.கவில் மறு­சீ­ர­மைப்­பு­கள் மேற்­கொள்­ளப்­ப­டும் என்று தலைமை அமைச்­சர் கூறிய வாக்­கு­று­தி­யில் இருந்து அவர் வில­கி­யுள்­ள­தால் ஐ.தே.க. அதி­ருப்­தி­யா­ளர்­களை இணைத்­துக்­கொண்டு இந்­தச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கப் பொது எதி­ர­ணி­யி­னர் தீர்­மா­னித்­துள்­ள­னர்.

மறு­பு­றத்­தில் சு.கவின் 16 பேர் எதி­ரணி வரி­சை­யில் அம­ர­வுள்­ளமை உள்­ளிட்ட பல கார­ணி­க­ளால் எதிர்­வ­ரும் 8ஆம் திகதி அர­சி­யல் அரங்­கில் பெரும் தாக்­கம் செலுத்­தும் நாளாக மாறி­யுள்­ளது.

3 கோடி
இதே­வேளை, எதிர்­வ­ரும் 8ஆம் திகதி புதிய நாடா­ளு­மன்ற அமர்வு சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக பிற்­ப­கல் 2.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. சுமார் மூன்று கோடி­கள் செல­வ­ழிக்­கப்­பட்டு சம்­பி­ர­தாய நிகழ்­வு­கள் இடம்­பெ­ற­வுள்­ளன என்று அறி­ய­மு­டி­கின்­றது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்..!!

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பமாகின்றது.

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பாடசாலை சுற்றுப்புறங்களையும் துப்பரவு செய்யுமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது. இதற்கமைவாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் பகுதிகள் துப்பரவு செய்யப்படவுள்ளன.

எதிர்வரும் பருவ கால மழையின் காரணமாக டெங்கு நுளம்பு பெரும் அபாயம் இருப்பதினால் இதனை எதிர்கொள்வதற்காக கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நிமல் கருணாரட்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இன்றைய தினம் மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை சுற்றாடல் பகுதிகளிலும் சிரமதான பணிகள் இடம்பெறவுள்ளன என்று தெரிவித்தார். டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதுடன் வெசாக் வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளை அலங்கரிப்பதே இதன் நோக்கமாகும்..

அரசாங்கம் அறிவித்துள்ள பெசாக் வாரத்திற்கு அமைவாக பாடசாலைகளில் வெசாக் வாரத்தை முன்னெடுப்பதிலும் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த வார காலப்பகுதியில் பல நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது என்று அமைச்சின் மதம் தொடர்பான கல்வி பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.என்.நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வருகிறது ஜீ.எஸ்.பி வரிச் சலுகை..!!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் இன்று (22) முதல் நடைமுறைக்கு வரும்கின்றது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கையொப்பமிட்டிருந்தார்.

அதன்படி இந்த வரிச் சலுகை இம்மாதம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜீ.எஸ்.பி) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை.

இதன் விளைவாக ஜீ.எஸ்.பி கடந்த 2017 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜீ.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதிகளுக்கு ஜனவரி 1, 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eight =

*