;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (22.04.2018)

0

9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் இருவர் கைது..!!

இந்தியாவிற்கு தங்கத்தினை கடத்த முயற்சித்த 2 பேர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்தினை மீட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்..!!

வந்­தா­று­மூலை கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நாளை 23ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­கலைக் கழக கல்வி சாரா ஊழி­யர்­களின் பணிப் புறக்­க­ணிப்புப் போராட்டம் சுமார் 44 தினங்கள் நடை­பெற்­றது. இதன் கார­ண­மாக மாண­வர்­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் இடை நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

அதனைத் தொடர்ந்து அண்­மையில் இவ் ஊழி­யர்­களின் போராட்டம் நிறை­வுக்கு வந்­ததை அடுத்து கிழக்குப் பல்­கலைக் கழ­கத்தின் கலைப் பீடத்தில் பயிலும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கு­மான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் புத்தாண்டுக் கொண்டாட்டம்; ஜனாதிபதி பங்கேற்பு..!!

லண்டன் கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தின் அக்கமகா பண்டித கலயாயே பியதஸ்ஸி நாயக்க தேரரின் தலைமையில் நேற்று (21) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில், பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

லண்டன் ஹெரோ லெஷர் நிலையத்தில் (Harrow Leisure Centre) நேற்று இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிரித்தானியாவில் வசிக்கும் சுமார் 4,000 இலங்கையர்கள் பங்கேற்றனர்.

நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், இலங்கையின் சுதேச விளையாட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் இந்தக் கொண்டாட்டத்தில் இடம்பிடித்திருந்தன.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, பிரித்தானியாவில் வசிக்கும் சகல இலங்கையர்களுக்கும் மலர்ந்துள்ள சிங்கள, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டின் சட்டதிட்டங்களை விட மக்களின் பண்பாடும் பாரம்பரியமும் பலமிக்கதாகும் என்பதுடன் இலங்கையின் கலாசார விழுமியங்களை மதித்து புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமைக்கு பாராட்டு தெரிவித்தார்.

கடையை உடைத்து திருடியவர்கள் கைது..!!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், கடையொன்றை உடைத்து பொருட்களைத் திருடிய இளைஞர்கள் இருவரை, நேற்றைய தினம் (21) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கந்தளாய், வட்டுக்கச்சி மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபர்கள் பேராறு பகுதியிலுள்ள கடையொன்றினை உடைத்து மாவு வகைகள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் மற்றும் 18,000 ரூபாய் பணத்தினையும் திருடியுள்ளதாக்க கடை உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் , குறித்த சந்தேகநபர்களை இன்று (22) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + nineteen =

*