;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (22.04.2018)

0

சிலாபத்தில் ஆழிப்பேரலை அறிகுறி இல்லை!!

சிலாபத்தில் ஆழிப்பேரலைக்கான அறிகுறி எதுவும் இல்லை – என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிலாபம் தொடுவாவப் பகுதியில் பிரதான பாதைக்கு கடல் அலை பெருக்கம் அதிகரித்துள்ளது.

கரையோர வாடிகள் கடல் அலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஆழிப்பேரலைக்கான அறிகுறி இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றன் வேகம் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அரசாங்கத்தை பலப்படுத்த புதிய உடன்படிக்கை

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஒரே தலைமைத்துவத்தின் கீழ் செயற்படும் தேசிய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்படவுள்ளதுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி – ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தின் புதிய உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இம்மாத இறுதிக்குள் புதிய அமைச்சரவை மாற்றப்படும், அது குறித்து ஜனாதிபதி -பிரதமர் இறுதித்தீர்மானம் எடுக்கவுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தின் உடன்படிக்கைகள் மற்றும் அமைச்சரவை மாற்றங்கள் குறித்து தற்போது அரசியல் தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தங்க ஆபரணங்கள் கடத்திய தம்பதி கைது!!

இலங்கையிலிருந்து மும்பைக்குத் தங்க ஆபரணங்கள் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கணவன், மனைவி பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 2.355 கிலோ கிராம் நிறையுடைய, 9.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மீட்டுள்ளன என்று சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சாரதிகளிடம் கோரிக்கை.!

கொழும்பு அசோக வித்தியாலயத்தால் முன்னெடுக்கப்படும் பேரணி காரணமாக அதனை அண்டியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார், சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*