;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (23.04.2018)

0

பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிப்பு

பொல்கஹவெல மற்றும் அலவ்வ பகுதிகளுக்கு இடையே புகையிரதம் ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளறு காரணமாக பிரதான பாதையின் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுஅறை தெரிவிக்கின்றது.

உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய்

உலகின் சுமார் 100 நாடுகளில் மலேரியா நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் மலேரியா தொடர்பில் முழுமையான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர் திருமதி தேவனீ ரணவீர தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாடுகளுக்குச் சென்று, நாடு திரும்பும்போது இரத்தப் பரிசோனையை மேற்கொள்வது கட்டாயமாகும். மலேரியா நோய் ஏற்பட்டால், முழுமையான சிகிச்சைக்கு அல்லது அதன் பின்னரான சிகிச்சை தொடர்பில் தேவையான ஆலோசனைகள் அல்லது உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

இதற்கான தொலைபேசி இலக்கம் 0117 626 626 என்பதாகும். இதேபோன்று, இவ்வாறான நபர்கள் ஒரு வருடத்திற்குள் காய்ச்சால் பாதிக்கப்பட்டால், மலேரியா நோய் தொடர்பில் அவசியம் கவனம் செலுத்த வேண்டுமென்றும் சமூக சுகாதார விசேட வைத்தியர் டொக்டர் திருமதி தேவனீ ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மலேசியா நோயற்ற நாடு என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று (23) முதல் ஆரம்பமாகிறது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகியதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு கடந்த 6 ஆம் திகதியுடன் இரண்டாம் தவணைக்கான விடுமுறை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிலாபத்தில் ஆழிப்பேரலை அறிகுறி இல்லை!!

சிலாபத்தில் ஆழிப்பேரலைக்கான அறிகுறி எதுவும் இல்லை – என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிலாபம் தொடுவாவப் பகுதியில் பிரதான பாதைக்கு கடல் அலை பெருக்கம் அதிகரித்துள்ளது.

கரையோர வாடிகள் கடல் அலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஆழிப்பேரலைக்கான அறிகுறி இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றன் வேகம் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − three =

*