;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (23.04.2018)

0

உதயங்கவை இலங்கையிடம் கையளிப்பதில் சிக்கல் ?

கடந்த மாதம் துபாயில் கைதுசெய்யப்பட்ட ரஸ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கையிடம் கையளிப்பதற்கு துபாய் அதிகாரிகள் மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை உதயங்கவை பொறுப்பேற்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் எனினும் அது வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் உதயங்க வீரதுங்க கடந்த மாதம் துபாயில் கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து அதிகாரிகள் உதயங்கவை கைதுசெய்திருந்தனர்.

மிக் விமானக்கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணையையும் பிறப்பித்திருந்தது.

உதயங்க வீரதுங்க கைதுசெய்யப்பட்ட பின்னர் அவரை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

எனினும் இந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, உதயங்கவை கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்காக மற்றுமொரு குழுவை துபாய்க்கு அனுப்பவுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

மீன்பிடிக்கச் சென்ற இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் பலி

இராணுவ புலனாய்வு உத்தியோகத்தர் களப்பில் மீன்பிடிக்கச் சென்ற சமயம் சேற்றில் புதைந்து உயிரிழந்துள்ளாரென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

காத்தான்குடி 6 ஆம் பிரிவு விடுதி வீதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஏ.சி. முகமட் றியாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாளங்குடா இராணுவ முகாமின் பின்பகுதியில் அமைந்துள்ள களப்பு பகுதியில் சம்பவதினம் மாலை 5 மணிக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டபோதே களப்பின் சேற்றில் புதைந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மீனவர்களுக்கு எச்சரிக்கை..!!

நாட்டைச் சூழ­வுள்ள கடற்­ப­குதிள் நாளை 24 ஆம் திகதி வரை கொந்­த­ளிப்­புடன் காணப்­படும் எனவும், அதன் கார­ண­மாக மீன் பிடி தொழி­லுக்குச் செல்லும் மீன­வர்­களை கட­லுக்கு செல்­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ நிலையம் அறி­வு­றுத்தல் விடுத்­துள்­ளது.

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் கார­ண­மாக புத்­தளம் முதல் மட்­டக்­க­ளப்பு வரை­யான கரை­யோர பிர­தே­சங்­களில் கால­நி­லையில் மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளதன் கார­ண­மாக நாடளா­விய ரீதியில் காணப்­படும் 8 மாவட்­டங்­களில் கடல் கொந்­த­ளிப்­புடன் காணப்­படும். கடல் அலை சுமார் 2.5 மீற்றர் தொடக்கம் 3.5 வரை உயரக் கூடும்

புத்­தளம் தொடக்கம் நீர்கொழும்பு, கொழும்பு, களுத்­துறை, காலி, மாத்­தறை ஊடாக மட்­டக்­க­ளப்பு வரை­யி­லான கடற்­பி­ராந்­தி­யங்­களை சூழ­வுள்ள மீனவ தொழி­லா­ளர்கள் மீன்பிடி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட வேண்டாம்.

எனினும் ஏதேனும் அனர்த்­தங்கள் ஏற்­படும் சந்­தர்ப்­பத்தில் 117 என்ற அவ­சர இலக்­கத்­திற்கும், 011-3613622 என்ற இலக்­கத்­திற்கும் அழைப்­பினை ஏற்­ப­டுத்தி அனர்த்தம் தொடர்­பாக அறி­விக்க முடியும். எனவே மீன­வர்கள் மாத்­தி­ர­மின்றி கடற்­கரை பிர­தேச வாசி­களும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­வ­தோடு கடலுக்கு நீராடச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித் துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 11 =

*