;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.04.2018)

0

இன்றும் பல பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்படலாம்

நாட்டில் நாளை வரையான காலப்பகுதியில் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கரையோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் கடல் அலைகள் சிறியளவில் நிலப்பகுதிகளுக்கும் வரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசத்தில் காற்றானது தெற்கு தொடக்கம் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பிரதேசங்களில் மேற்கு தொடக்கம் தென்மேற்கு வரையான திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20 – 30 கிலோமீற்றர் வரை காணப்படும்.

தெற்கு ஆசியாவிலேயே 24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை

தெற்கு ஆசியாவிலேயே 24 மணிநேரத்திற்குள் மின்சாரம் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான் என மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமித் உள்ளிட்ட 32 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கண்டி, திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 32 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று (23) தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, தெல்தெனிய பகுதியில் இன்று பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்துயாளர் தெரிவித்தார்.

கதிர்காம பிரதேச சபை தவிசாளருக்கு விளக்கமறியல்

கடந்த ஜனவரி மாதம் பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கதிர்காம பிரதேச சபை தவிசாளர் மே மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸமகராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*