;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (23.04.2018)

0

அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இன்று (23) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை சீர்திருத்தம் தொடர்பான விடயங்கள் மற்றும் புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேராதனை பூங்காவிற்கு இவ்வளவு வருமானமா.?

இலங்கையில் உள்ள உள்ளூர் வாசிகளுக்கு மட்டும் அல்ல இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மனம் கவர் இடமாக பேராதனை தாவரவியல் பூங்கா திகழ்கிறது.

பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிடுவதற்காக பெப்ரவரி மாதம் 98411 உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதேவேளை பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு பெப்ரவரி மாதம் 58154 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விஜயம் தந்துள்ளனர்.

தேசிய சுற்றுலாப் பயணிகள் மூலம் நான்கு கோடியே 20 இலட்சம் ரூபா பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு கிடைத்துள்ளது.

அதேசமயம் பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் 85 இலட்சம் ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் : சீனா மீண்டும் உறுதி

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது. இலங்கையுடனான சீனாவின் ஒத்துழைப்பு எவையும் சீனாவின் இராணுவ ஆதிக்கத்தினை இலங்கையில் நிலைநாட்டும் நோக்கத்துடனானது அல்ல என இலங்கைக்கான சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக வெளிவரும் வதந்திகள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சீன தூதுவருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இதன் போதே சீனத்தூதுவர் எச்.ஈ. செங் சேயுவான மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.

பொது தேர்தல் குறித்த போராட்டத்திற்கு கூட்டு எதிர்கட்சி தயார்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தை வலுப்படுத்திக்கொண்டு ஆட்சி தொடர் தீர்மானித்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு நெருக்கடியினை கொடுத்து பொது தேர்தல் ஒன்றுக்கான வியூகத்தை கூட்டு எதிர்கட்சி வகுக்க உள்ளது.

இதனை மையப்படுத்திய விஷேட கலந்துரையாடல் நாளை மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + nineteen =

*