;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (23.04.2018)

0

சஷி வீரவங்சவின் கடவுச்சீட்டு வழக்கு ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்துள்ள வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸின் நெறிப்படுத்தலின் கீழ் சாட்சியமளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சஷி வீரவங்சவின் சாதாரண கடவுச்சீட்டில் பிறந்த வருடம் 1967 ஆம் ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இராஜதந்திர கடவுச்சீட்டில் பிறந்த ஆண்டு 1971 ஆம் ஆண்டு என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு கடவுச்சீட்டுகளில் பிறந்த ஆண்டு 4 ஆண்டுகள் மாறி இருப்பதை தான் அவதானித்த போதிலும் அது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினருக்கோ அல்லது வேறு நிறுவனங்களிலோ முறைப்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு மேலதிக விசாரணை ஜூன் மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனது தரப்பு வாதி வெளிநாடு செல்ல வேண்டும் என்பதால், புதிய கடவுச்சீட்டு ஒன்றை வழங்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிடுமாறு பிரதிவாதியான சஷி வீரவங்ச சார்பில் அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த நீதவான் அப்படியான உத்தரவை தன்னால் பிறப்பிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

சந்தேகநபருக்கு கடவுச்சீட்டை வழங்க வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவுகள் எதனையும் பிறப்பிக்கவில்லை எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சட்டத்திட்டங்களுக்கு அமைய இது சம்பந்தமாக முடிவுகளை திணைக்களத்தின் அதிகாரிகள் எடுக்க முடியும் எனவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த பாராளுமன்ற அமர்வை உறுதிசெய்த ஜனாதிபதி

அடுத்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 8 ஆம் திகதி 2.15 மணியளவில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

’சஜித், நவீனுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்குக’ ரஞ்சன் அறிவுரை

ஐக்கிய தேசியக் கட்சியை முன்னின்று வழிநடத்துவதற்கான வாய்ப்பை சஜித் பிரேமதாஸ மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோருக்கு வழங்க வேண்டுமென பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

“சஜித்துக்கும் நவீனுக்கும் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும், ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் துடுப்பெடுத்தாடிவிட்டார்” என இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கிரிக்கெட் வாசகங்களைக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “2002ஆம் ஆண்டு ரணில் துடுப்பெடுத்தாடி சதமடித்தார், 2004ஆம் ஆண்டு ஆட்டமிழந்தார், 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில், சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன போன்ற வீரர்களை ஐக்கிய தேசியக் கட்சி, இறக்குமதி செய்தது. தற்போது ஏனையவர்களுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை வழங்குவதற்கான காலம் கனிந்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைமை பதவி குறித்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் “இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமத்திபால மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடக்கூடாது. வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைப்போன்று கட்சியின் தலைமைகளும் செயற்பட வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.

“நான் ஒரு நடிகனாக காதல் காட்சிகளில் நடிப்பதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளேன். தந்தைப் போன்ற பாத்திரங்களில் நடிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன். அதுபோல் முதிர்ந்த அரசியல்வாதிகள் இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்” எனவும் அவர் இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.

தங்கத்தின் விலை 8,000 ரூபாயால் உயர்வு

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரி காரணமாக, தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் 15 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையும் தாயும் சடலமாக மீட்பு

ழந்தையும், தாய் ஒருவரும், இன்று காலை, அபரகந்த – ஹிந்துமவில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 32 வயதான தாயொருவரும், 10 மாதங்களேயான அவரின் குழந்தையுமே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த பெண், மனநல பாதிப்புக்குள்ளானவர் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 3 =

*