;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (24.04.2018)

0

ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை கூட்டம் இன்று

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சபை இன்று (24) கூடவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்போது, கட்சியில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்கள் மற்றும் கட்சியின் பதவி நிலைகள் உருவாக்குதல் குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் புதிய பதவி விபரங்களை முன்வைக்க வேண்டும் என்பதால், இன்று இறுதி தீர்மானம் ஒன்று எட்டப்பட உள்ளதாக அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

வத்தளை பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) அதிகாலை மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மதில் ஒன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை, ஹெந்தல பகுதியை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இந்தப் பாதை மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நியோமல் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் மே மாதம் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் சம்பந்தமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 18 =

*