;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (24.04.2018)

0

நீரில் மூழ்கி வெளிநாட்டவர் ஒருவர் பலி

ஹிக்கடுவை, வேவல பகுதியில் கடலில் குளித்துக்கொண்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அலையில் சிக்கி கவலைக்கிடமாக இருந்த நபரை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெலரூஸ் நாட்டினை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லமால் ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளர்களான அவரது மனைவி மற்றும் உறவினரை கைது செய்யவும் நீதிபதி பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபரான ஜாலிய விக்ரமசூரியவை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் குற்றவியல் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி மீண்டும் மே மாதம் 14 ஆம் திகதி வழக்கை மறு விசாரணை செய்யும் உத்தரவிட்டதோடு அந்த தினத்தில் பொலிஸ் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதற்காக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புறக்கணித்த அமைச்சர்களும் கலந்து கொண்ட இன்றைய அமைச்சரவை கூட்டம்

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரையில் இன்றைய அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.

கடந்த அமைச்சரவை கூட்டத்தை புறக்கணித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*