;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (24.04.2018)

0

அம்பாறையில் குப்பை காரணமாக 6 யானைகள் பலி

அம்பாறை – தீகவாபி பிரதேசத்தில் குப்பைகளை உட்கொண்டதன் காரணமாக இதுவரை 6 யானைகள் உயிரிழந்துள்ளதாக அம்பாறை வனசீவராசிகள் பாதுகாப்புப் பிரிவின் கால்நடை மருத்துவர் நிஹால் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

கல்முனை , சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் குறித்த இடத்தில் கொட்டப்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த வனப்பகுதியிலிருந்து குப்பைகளை உண்பதற்காக காட்டு யானைகள் நாள்தோறும் வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்த அமைச்சரவைக் கூட்டம்!!

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டின் பின்னர் முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரச தலைவர் செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற கூட்டத்தில்,
சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடுகண்ணாவ கற்குகையில் வெடிப்பு- போக்குவரத்து நிறுத்தம்!!

கடுகண்ணாவ கற்குகை சந்தியிலுள்ள கற்குகையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், அதனுடான வாகன போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை தேசிய கட்டட ஆய்வ நிறுவனம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – கண்டி வீதி அபிவிருத்தியின் போது இந்தக் கற்பாறை வீதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 3 =

*