;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (25.04.2018)

0

ஜே.சி.பியு­டன் விபத்து: ஒரு­வர் உயிரிழப்பு- மற்­றொ­ரு­வர் படு­கா­யம்!!

ஜே.சி.பியு­டன் மோட்­டார் சைக்­கிள் விபத்­துக்­குள்­ளா­ன­தில் மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வர் உயி­ரி­ழந்­தார். மற்­றொ­ரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

இந்­தச் சம்­ப­வம் நேற்று மாலை 6 மணி­ய­ள­வில் சாவ­கச்­சேரி, நுணா­வி­லில் நடந்­துள்­ளது.

சாவ­கச்­சே­ரி­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்தை நோக்­கிப் பய­ணித்த மோட்­டார் சைக்­கிள் முன்­பா­கப் பய­ணித்­துக் கொண்­டி­ருந்த கொண்­டி­ருந்த ஜே.சி.பி. வாக­னத்­து­டன் மோதுண்­டது. ஜே.சி.பி. வாக­னம் சமிக்­ஞை­யின்றித் திரும்­பி­ய­தா­லேயே விபத்து இடம்­பெற்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.

காய­ம­டைந்த இரு­வ­ரும் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். எனி­னும் ஒரு­வர் உயி­ரி­ழந்­தள்­ளார் என்று மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த மற்­றை­ய­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

விபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம்

புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமான குழுவின் அறிக்கை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் கட்டணத்தை நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிப்பது சம்பந்தமான யோசனை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள தகவல்கள் தெரவிக்கின்றன.

பயணிகள் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை மாத்திரம் குழுவின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள், பொதிகள் விநியோக சேவைக்கான கட்டணம் அதிகரிப்பு மேற்கொள்வதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த அறிக்கை அமைச்சரவைக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

அமைச்சரவை அனுமதி பெற்றபின்னர் புகையிரத கட்டண அதிகரிப்பு சம்பந்தமாக வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும்.

ஐ.தே.கவின் உயர் பத­வி­க­ளுக்கு கட்­சிக்­குள்­ளேயே வாக்­கெ­டுப்பு!!

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­தித் தலை­வர், தவி­சா­ளர், பொதுச்­செ­ய­லா­ளர், பொரு­ளா­ளர், தேசிய அமைப்­பா­ளர் உள்­ளிட்ட உயர் பத­வி­க­ளுக்கு உள்­ளக வாக்­கெ­டுப்பு மூலமே உறுப்­பி­னர்­கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ள­னர்.

அர­சி­யல் சபை­யின் இணக்­கப்­பாட்­டு­டன் – வாக்­கெ­டுப்­பின்றி உறுப்­பி­னர்­களை தெரி­வு­செய்­வ­தற்கு இன்று மாலை­வரை கால­அ­வ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தும் அது கைகூ­டா­தென்றெ எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய மறு­சீ­ர­மைப்பு தொடர்­பி­லும், புதிய உறுப்­பி­னர்­கள் தேர்வு சம்­பந்­த­மா­க­வும் இறுதி முடி­வு­களை எடுப்­ப­தற்­காக அந்­தக் கட்­சி­யின் அர­சி­யல் சபை நேற்­றுக் கூடி­யது.

12 பேர் அடங்­கிய இந்­தக் குழு சுமார் ஒன்­றரை மணி நேரத்­துக்கு மேலா­கக் கலந்­து­ரை­யாடி இருந்­தா­லும் பதவி நிலை சம்­பந்­த­மாக இறுதி முடிவு எதை­யும் எட்­ட­வில்லை.

மறு­சீ­ர­மைப்பு சம்­பந்­த­மாக இன்று மாலைக்­குள் இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் இறுதி முடிவை எடுக்க முடி­யா­மல் போனால், வாக்­கெ­டுப்பு மூலமே தெரிவு இடம்­பெ­ற­வேண்­டும் என்று கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. வாக்­கெ­டுப்­புக்கு அமைச்­சர் ரவி கரு­ணா­நா­யக்க எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தா­லும் ஏனை­ய­வர்­கள் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­த­னர்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் மத்­திய செயற்­குழு நாளை கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­த­வில் கூட­வுள்­ளது. இந்­தக் கூட்­டத்­தின்­போதே வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கட்­சி­யின் நாடா­ளு­மன்­றக் குழு­வுக்­கும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஐ.தே.கவின் தலை­வர் பதவி தவிர ஏனைய பத­வி­க­ளுக்கு உறுப்­பி­னர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர். பிர­தித் தலை­வர் பத­விக்­குத் தான் போட்­டி­யி­டு­வா­ரென சஜித் பிரே­ம­தாஸ அறி­வித்­துள்­ளார்.
அதே­வேளை, அர­சி­யல் சபை இன்­றும் கூட­வுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 8 =

*