;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (25.04.2018)

0

சு.கவின் 16 பேரும் எதிரணியில் அமர ஜனாதிபதி அனுமதி வழங்கினார்

தேசிய அரசாங்கத்தை விட்டு விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பே​ரும், நாடாளுமன்றத்தின் எதிரணியில் அமர்வதற்கும், ஜனாதிபதி அனுமதி வழங்கினார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, நேற்று இரவு 8 மணியளவில் கூடியதுடன், அது இரவு 10.30 வரைத் தொடர்ந்தது. இந்தச் செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னர், சு.கவின் நாடாளுமன்றக் குழுக்களுடனான சந்திப்பொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

’கோட்டாவிடம் விசாரணை நடத்த தைரியம் இல்லை’

வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களில், உத்தரவுகளைப் பிறப்பித்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கான தைரியம் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு இல்லையென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தரவுகள் இன்றி எதுவும் நடைபெறப்போவது இல்லையென அவர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார் ” பாதுகாப்பு அமைச்சர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்துடனும் கோட்டபாய ராஜபக்சவுக்கு தொடர்புகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“பாதாள உலகக் குழுக்களுடன் எவருக்காவது தொடர்புகள் காணப்பட்டால் அவர் படுகொலை செய்யப்படுவார் எனினும் பொலிஸ் விசாரணைகள் எதுவுத் முன்னெடுக்கப்படமாட்டாது. பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களை படுகொலை செய்வதற்கான உரிமை அரசியல்வாதிகளுக்கு இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டிக் கலவரம் : 2 பிரதேச சபை உறுப்பினர்கள் தலைமறைவு!!!

கண்டிக் கலவரத்தின் பிரதான சந்தேக நபர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாகியிருக்கும் இரு பிரதேச சபை உறுப்பினர்களை தேடி விசாரணைகள் தொடர்வதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

திட்டம் தீட்டி கண்டி மாவட்டம் எங்கும் இன ரீதியிலான அரங்கேற்றிய வன்முறைகள் தொடர்பில் இது வரை 32 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பௌத்த பிக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் மற்றும் இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றனர்.

மது விற்பனை தொடர்பில் சுற்றிவளைப்பு

வெசாக் பண்டிகை காலப்பகுதியில் நாடு முழுவதிலும் உள்ளடக்கிய வகையில் மது தொடர்பான குற்றச் செயல் மற்றும் கலால் திணைக்களத்தினால் அனுமதி பெற்ற நிலையங்களில் இடம்பெறும் முறைக்கேடுகளை தவிர்ப்பதற்கு விசேட கண்காணிப்பு சேவையை இலங்கை மது வரி திணைக்களம் மேற்கொள்ளவுள்ளது.

மது வரி ஆணையாளர் நாயகம் ஆர்.சேமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக ஏப்ரல் 27 ஆம் திகதியிலிருந்து மே 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்திற்காக கண்காணிப்புகளுக்கான பொறுப்பு திணைக்களத்தின் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த கண்காணிப்பு மது வரி திணைக்களத்தின் தலைமையகத்தில் 24 மணித்தியாலமும் செயற்படும் விசேட பொறிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மது வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 4 =

*