;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (25.04.2018)

0

மீன் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக அந்த நாடுகளுக்கான மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட பின்னர் 2016 ஜூலை முதல் 2018 மார்ச் வரையான 21 மாத காலத்தில் 58,578.09 மெட்ரிக் டொன் மீன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 92,117 மில்லியன் ரூபா அந்நிய செலாவணி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்டிருந்த 2014ம் ஆண்டுக்கு காலத்தில் 26,320 மெட்ரிக் டொன் மீன்களே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

களனியில் கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டது

களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னால் கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.

இன்று காலநிலையில் மாற்றம்

இன்று காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 அல்லது 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

சரத் குமார குணரத்னவுக்கு பிணை

முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிபதி ஆர். குருசிங்க முன்னிலையில் இன்று விசாரிக்கப்பட்டது.

ஒரு சந்தேகநபர் 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 05 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப்பிணை என்ற அடிப்படையில் 06 சந்தேகநபர்களும் விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரம் சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிடப்பட்டதுடன், தற்போது கொழும்பு நீதவான் நீதிமன்றின் பொறுப்பில் உள்ள அவர்களின் கடவுச்சீட்டை மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

அந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 04ம் திகதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி நிதிக்கு ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 12 இலட்சத்து 78,000 ரூபா நிதியை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைவாக இந்த இரண்டு வழக்குகளும் நேற்று தாக்கல் செய்யப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 5 =

*