;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (26.04.2018)

0

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பம்

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகிறது அமைதியான மனம் ஆரோக்கியம் தரும் என்ற தொனிப் பொருளில் வெசாக் வார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாடெங்கிலும் பௌத்த வணக்கஸ்தலங்கள், அறநெறிப் பாடசாலைகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றை மையமாகக் கொண்டு தியான, தான, தர்ம நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

ரவூப் ஹக்கீமை சந்தித்த கனேடிய தூதுக்குழு

கனேடிய அரசாங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (25) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும் கிராமப்புறங்களுக்கான நீர் மூலங்களை கண்டறிந்து அவற்றை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதிலுள்ள சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டன.

அவ்வாறே, கழிவுநீரை சுத்திகரித்தல் மற்றும் திண்மக் கழிவகற்றல் என்பவற்றை பொறுத்தவரை தமது அமைச்சு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக பல்வேறு செயற்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தூதூதுக் குழுவினரிடம் தெரிவித்தார்.

ஐ.தே.க வின் விஷேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற உள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உறுப்பினர் சபைக்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட உள்ளது.

இன்றைய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் சமர்பிப்பதற்காக புதிய உறுப்பினர் சபைக்கான பெயர்கள் நேற்று (25) இடம்பெற்று அரசியல் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

நேற்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையி ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது புதிய உறுப்பினர் சபைக்கான பெயர்கள் முன் வைக்கப்பட்டதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

ஹம்பாந்தோட்டை மாநகர சபை சுதந்திர கூட்டமைப்பிடம்

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய தேசிய கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்த குறித்த சபையை பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

அதன்படி ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எராஜ் பெர்ணாந்தோ நியமிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

அலோசியஸ் மற்றும் கசுன் மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் மே மாதம் 10ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*