;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (26.04.2018)

0

ஜோசப் மைக்கல் பெரேரா பதவியை இராஜினாமா செய்தார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ரவி கருணாநாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் அந்தப் பதவியில் இருந்து இராஜீனாமா செய்துள்ளார்.

2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டில் பிற்பகல் வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சுமர் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப் பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

எவன்கார்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் கைது

எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பந்தமாக நடைபெறுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கடற்படை வீரரான லெப்டினென் சமுத்ர நிலுபுல் டி கொஸ்தா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அவர் எவன்கார்ட் நிறுவனத்தின் செயற்பாட்டு முகாமையாளராக பணியாற்றியுள்ளதாக ருவன் குணசேகர கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

கொம்பனித் தெருவில் இருந்து நகர மண்டபம் வரையான வீதியில் வாகன நெரிசல்

கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் பாதையில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அந்த வீதியில் வாகன நெரிச்ல ஏற்பட்டிருப்பதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*