;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (26.04.2018)

0

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

மாணவர்களை கலைப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எதிர்ப்பு ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன்காரணமாக கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் பாதையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் கூறத்தக்கது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் இருவர் நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கம்பஹா தொகுதி அமைப்பாளராக அஜித் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், சமிந்த குமார சுதுசிங்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளார்.

இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், இருவரும் ஜனாதிபதியிடமிருந்து தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

பௌத்த பிக்கு ஒருவர் உட்பட 10 மாணவர்கள் கைது

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பிக்கு மாணவர் ஒருவருடன் சேர்த்து மேலும் 09 மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை தோற்றுவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உட்பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தால் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

2016/2017 ம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பௌத்த சமயம் மற்றும் பௌத்த ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முதலை இறைச்சி விற்ற இரு நபர்கள் கைது

காலியில் முதலை இறைச்சி விற்றுக்கொண்டிருந்த மீனவர்களை பொலிஸார் கையும் கலவுமாக பிடித்துள்ளனர்.

காலியில் 10 அடி நீளமான முதலையின் இறைச்சிகளை விற்றுக்கொண்டிருந்த நபர்களையே பொலிஸார் கைதுசெய்துள்ளனர்

பொலிஸரால் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் இருநபர்களுக்கும் 50 ஆயிரம் ரூபா ஆபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*