;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (27.04.2018)

0

104 நாடுகளுக்கு சர்வதேச டி20 அந்தஸ்து

சர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளதோடு இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆப்ரிக்கா (22), அமெரிக்கா (17), ஆசியா (21), கிழக்கு ஆசிய- பசுபிக் (11), ஐரோப்பா (34) ஆகிய 104 உறுப்பினர்களும் சர்வதேச டி20 அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிக்கு மாணவர் உட்பட 10 மாணவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வியானா ஓடை விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை

அண்மைக்காலமாக வியானா ஓடையில் நிகழும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு வேலி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹியங்கனை – வியானா ஓடைக்கு பாதுகாப்பு வேலியை அமைக்குமாறு மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனாவுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 26 மில்லியன் ரூபா வியானா பாதுகாப்பு வேலியை அமைப்பதற்கு தேவைப்படுவதாகவும் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் சரத் சந்திரசிறி வித்தனா தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − 8 =

*