;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (27.04.2018)

0

ஹொரண இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் நீதிமன்றில் சரணடைந்தார்

ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹொரண நீதவான் நீதிமன்றில் இன்று (27) சரணடைந்துள்ளார்.

ஹொரண, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையின் அமோனியா அமிலம் அடங்கிய குழியை சுத்தம் செய்வதற்காக சென்ற ஊழியர் ஒருவர் அந்தக் குழிக்குள் கடந்த 19 ஆம் திகதி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பிரதேச மக்கள் சிலர் நச்சு வாயுவை சுவாசித்துள்ளதால் பாதிப்படைந்ததுடன், பாதிப்படைந்த 16 பேர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலையின் ஊழியர் உட்பட பிரதேசவாசிகள் ஐந்து பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சகல மது­பான சாலை­களுக்கும் பூட்டு.!

வெசாக் நோன்­மதி தினத்தை முன்­னிட்டு 29 மற்றும் 30 ஆம் திக­தி­களில் நாட்டின் சகல மது­பான சாலை­களும் மூடப்­பட வேண்டும் என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

அதேபோல் சட்­ட­வி­ரோத மது­பான விற்­ப­னைகள் குறித்த விசேட கண்­கா­ணிப்­பு­க­ளையும் மது­வரித் திணைக்­களம் முன்­னெ­டுக்­க­வுள்­ ளது.

பௌத்­தர்­களின் புனித தின­மான வெசாக் நோன்­மதி வாரம் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் 29 மற்றும் 30 ஆம் திக­தி­களில் வெசாக் தினம் அனுஷ்டிக்­கப்­ப­ட­வுள்­ளது. நேற்று முதல் ஆரம்­ப­மா­கிய வெசாக் வாரம் மே 3 ஆம் திகதி வரை அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் நாளை மறு­தினம் 29 ஆம் திகதி மற்றும் 30 ஆம் திகதி ஆகிய இரண்டு தினங்­களில் நாட்டில் சகல மது­பான சாலை­களையும் மூடு­மாறும் மது­பானம் விற்­பனை செய்­வதை 29,30 ஆம் திக­தி­களில் நிறுத்­து­மாறும் இறைச்சிகடைகளை மூடுமாறும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக் கது.

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு.!

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ரயில் நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில் வைத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயிவே அதிகாரிகள் தெரிவித்தனர். ரயிலின் மூன்று பெட்டிகளே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

எனினும் அதில் பயணித்த பயணிகளையும், தபால் கடிதங்களையும் வேறொரு ரயிலுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறாகயிருந்தாலும் சில மணி நேரம் பயணிகள் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டமை குறிப்பிடதக்கது.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும், அதன்பின் மலையக ரயில் சேவைகள் பாதிப்பில்லாமல் தொடரும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 11 =

*