;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (27.04.2018)

0

ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

2012 ஆம் ஆண்டில் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

5 கிராம் 700 மில்லி கிராம் ஹெராயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆயுள் தண்டனை விதிக்க நபர் கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

மார்ச் மாதம் 08 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று (26) மாலை குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாக நோன்மதி காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

விசாக நோன்மதி காலப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகருக்கான பாதுகாப்பு கடமைகளில் 3 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரில் 11 வெசாக் அலங்கார பந்தல்களும், ஐந்து வலயங்களும் அமைக்கப்படவுள்ளன.

இவற்றை பார்வையிட வரும் மக்களின் நலன்கருதி சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயிரத்து 900 பொலிஸார் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஆயிரத்து 100 பேர் பணியாற்றுவார்கள் என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு.!

ஹொரணை – பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர், தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் ஆய்வுகூட உதவியாளர் ஆகியோர் எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹொரணை நீதவான் நீதிமன்றில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த இறப்பர் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் இன்று காலை சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 19 ஆம் திகதி குறித்த இறப்பர் தொழிற்சாலையில் இடம்பெற்ற அனர்தத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் சுகயீனமுற்றனர்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இறப்பர் தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க பிரஜைகளுக்கு எச்சரிக்கை.!

மே தின கொண்டாட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உலக தொழிலாளர் தினத்தினை அரசாங்கம் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பிற்போட்டதை தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிகளில் நாட்டில் பேரணிகள் மற்றும் பிரசார கூட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களும் அதிகமாக காணப்படுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை வரும் அமெரிக்க பிரஜைகள் பாதுகாப்புடன் செயற்படுமாறும் பேரணிகள் மற்றும் கூட்டங்களில் பங்குப்பற்றுவதை தவிர்த்து கொள்ளுமாறும் கேட்டு கொண்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*