;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (27.04.2018)

0

லிற்றோ கேஸ் விலை அதிகரிப்பு

இன்று (27) நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், விலை அதிகரிப்பிற்கான அனுமதி நுகர்வேர் அதிகார சபையால் இன்று கிடைக்கப்பெற்றதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்டது

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெறாது, பிரிதொரு தினத்தில் நடாத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் நடாத்தும் குழுவில் உள்ள சிக்கல்கள் காரணமாகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 20 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால மே 19 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திலங்க சுமதிபாலவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் திலங்க சுமதிபால உட்பட பலரிற்கு எதிராக பிரதியமைச்சர் ரஞ்சன்ராமநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தனது முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளது என பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில் இடம்பெற்ற ஊழல்களிற்கு காரணமான பலரிற்கு எதிராக நான் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளேன் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

ஆட்டநிர்ணய சதி மற்றும் ஒலிபரப்பு உரிமையை வழங்குவதில் இடம்பெற்ற ஊழல்முறைகேடுகள் குறித்து முறைப்பாடுகளை சுமத்தியுள்ளேன் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பிரதியமைச்சர் இலங்கை அணி சமீபத்தில் சந்தித்துள்ள பின்னடைவுகளிற்கு மோசடிகளே காரணம் எனவும தெரிவித்துள்ளார்.

நான் மாத்திரம் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்யவில்லை கிரிக்கெட் வீரர்கள் உட்பட வேறு பலதரப்பினரும் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 4 =

*