;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (28.04.2018)

0

மேம்பாலம் நாளை தற்காலிகமாக மூடப்பட்டும்

கடுவெல – கொழும்பு பிரதான வீதியில் கடுவெல நகரில் ஹேவாகம நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை (28) மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தற்காலிகமாக ஹேவாகம நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் மூடப்பட்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதி விபத்தில் 17 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வௌியேறும் வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடவத்தையில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கராப்பிட்டிய மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பின்னதுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இரு சிற்றூர்ந்துகள் மோதி விபத்து :ஒருவர் உயிரிழப்பு 6பேர் காயம்

கொழும்பு -வெல்லவாய வீதியின் மாரகொல்லிய பிரதேசத்தில் சிற்றூர்ந்துகள் இரண்டு ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று நடந்தது.

காயமடைந்தர்வர்களில் 7 வயதான சிறுமி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 7 =

*