;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (28.04.2018)

0

வீதி தாழிறங்கியதால் தற்காலிகமாக மூடப்பட்டது

நாத்தாண்டிய – தங்கொட்டுவ வீதியில் இருக்கின்ற தும்மோதரை பாலம் தாழிறங்கியுள்ளதால் அந்த வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை கூறியுள்ளது.

நேற்று இரவு அந்த பாலத்தின் மேல் சென்ற லொறி ஒன்று சென்ற போது தாழிறக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகள் பழமையான இந்தப் பாலம் கடந்த காலங்களில் பல தடவைகள் சேதமடைந்த போதிலும் அதற்கு நிரந்தர தீர்வொன்று வழங்காமையின் காரணமாக இந்த நிலமை ஏற்பட்டிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டம் மூலம் 900 கோடி ரூபா வருமானம்

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தேசிய மின் விநியோக வலைப்பின்னலுக்கு சேர்ந்த மின்வலுவின் மூலம் 900 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் வருடம் தோறும் 15 கோடி ரூபாவுக்கு மேலான பெறுமதி உடைய மின்வலுவை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செயற்றிட்ட மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் ஜி.ஜி.தாயனந்த தெரிவித்தார்.

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் பாசன நீரை விநியோகித்ததால், ரஜரட்ட வலயத்தில் 80 ஆயிரம் ஏக்கர் வயற்காணியில் பெரும்போக நெற்செய்கையை சிறப்பாக மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் கூறினார்.

சாதனைப் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு வரவேற்பு!!

தெற்காசிய வலய நாடுகளுக்கான விளையாட்டு போட்டிகள் அண்மையில் நேபாளத்தில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான பலுத்தூக்கும் போட்டியில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பெண் உத்தியோகத்தரான வாசனா சந்தமாலி (63 கிலோ) எடைக்கொண்ட பழுத்தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இவரை வரவேற்கும் நிகழ்வு கம்பளை நகரில் நடைபெற்றது. இதில் கம்பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.யாப்பா, பொலிஸ் உத்தியோகத்தர்கள், கம்பளை பிரதேச செயலாளர், கம்பளை நகர சபை உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இசைக்கருவிகள் வழங்கும் நிகழ்வு

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட கிளைகளின் ஏற்பாட்டடில் யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யபப்பட்ட பாடசாலைகளுக்கு இசைக்கருவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வு யாழ் முத்துதம்பி மகாவித்தியாலயத்தில் கடந்த செய்வாய்கிழமை இடம் பெற்றது.

நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச்சங்க யாழ்ப்பாணம் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் நன்கொடையாளர்கள் பாடசாலை மாணவர்கள் நலன்விரும்பிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*