;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (29.04.2018)

0

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ​

தொடர்ந்து மழை பெய்தால் எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்னபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை ​

வெசாக் தினத்தை முன்னிட்டு 432 சிறைக்கைதிகளுக்கு விடுதலை கிடைக்க பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய சிறிய தவறுகள் தொடர்பில் சிறைபிடிக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அர­சின் அழைப்பை நிரா­க­ரித்­தார் சூகா!!

பன்­னாட்டு உண்மை மற்­றும் நீதிக்­கான செயற்­றிட்­டத்­தின் தலை­ வ­ரும் ஐக்­கிய நாடு­கள் சபை­யின் முன்­னாள் நிபு­ண­ரு­மான யஸ்­மின் சூகா விடம், இலங்­கைக்­குப் பய­ணம் செய்­யு­மாறு இலங்கை ரசு விடுத்த அழைப்பை நிரா­க­ரித் துள்­ளார்.

இந்­தத் தக­வ­லைச் சிங்­கள ஊட­கம் ஒன்ற விடுத்­துள்­ளது.
இலங்கை அரச படை­யி­னர் 40 ஆயி­ரம் அப்­பா­வித் மிழ் மக்­க­ளைக் கொன்று குவித்­த­னர் என்று சூகா குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தார். இந்த நிலை­யி­லேயே அரசு அவ­ருக்கு அழைப்பு விடுத்­தது.

அடுத்­த­மா­தம் அவர் பய­ணம் செய்­வார் என்­றும் கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தான் இலங்­கைக்­குப் பய­ணம் செய்­தால் எதிர்ப்­புக் கிளம்­பும் என்­ப­தால் அவர் பய­ணத்தை ஒத்­தி­வைத்­தார் என்று அந்த ஊட­கம் குறிப்­பிட்­டுள்­ளது.

இறு­திப் போரில் இடம்­பெற்ற மனித குலத்­துக்கு எதி­ரான மீறல்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு முன்­னாள் ஐ.நா பொதுச் செய­லர் பான்கி மூன் நிய­மித்த நிபு­ணர் குழு­வில் இவர் இடம்­பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

10 நிமிடம் மினி சூறாவளி!!

சியம்பலாகஸ்கொட்டுவ பகுதியில் சற்றுமுன்னர் வீசிய கடும் காற்றினால் பல மரங்கள் முறிந்து விழுந்ததுடன், பல வீடுககளின் கூரைகள் மற்றும் கடைகளின் கூரைகளும் சேதம் அடைந்துள்ளன என்று அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 10 நிமிடமளவில் வீசிய மினி சூறாவளி போன்ற காற்றினால் இந்தச் சேதங்கள் ஏற்பட்டன என்று ரதேச மக்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 7 =

*