;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (29.04.2018)

0

கம்பஹாவில் பாதாள குழு தலைவரின் மனைவி கைது.!

பிரபல பாதாள உலகக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒஸ்மன் குணசேகர என்பவரின் மனைவி கம்பஹா பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு விஷேட ரயில் சேவை

வெசாக் தினத்தை முன்னிட்டு விஷேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள இவ் விஷேட ரயில் சேவைகள் களுத்துறை தெற்கு, வேயன்கொட, அநுராதபுரம், அலுத்கம, அவிஸ்ஸாவெல்ல மற்றும் ரம்புக்கண்னை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள நேர அட்டவணையில்,

இன்று அதிகாலை 4.30 க்கு மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கும், காலை 6.30 க்கு களுத்துறையிலிருந்து மருதானைக்கும், காலை 7.40 க்கு மீண்டும் மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கும், காலை 9.20 க்கு களுத்துறை தெற்கிலிருந்து வேயன்கொடவிற்கும், பிற்பகல் 12.25 க்கு வேயன்கொடவிலிருந்து களுத்துறை தெற்கிற்கும், மாலை 3.20க்கு மீண்டும் களுத்துறையிலிருந்து மருதானைக்கும், இரவு 8.30 க்கு அலுத்கமவிலிருந்து மருதானைக்கும், மாலை 6.30 க்கு அநுராதபுரத்திலிருந்து கொழும்பிற்கும், 6.50 க்கு அவிஸ்ஸாவெல்லவிலிருந்து கொழும்பிற்கும், 10.45 க்கு ரம்புக்கனையிலிருந்து கொழும்பிற்கும் விஷேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை 30 ஆம் திகதி மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கு அதிகாலை 4.30 க்கும், களுத்துறையிலிருந்து மருதானைக்கு காலை 6.30 க்கும், மீண்டும் மருதானையிலிருந்து களுத்துறை தெற்கிற்கு காலை 7.40 க்கும், களுத்துறை தெற்கிலிருந்து வேயன்கொடவிற்கு முற்பகல் 9.20 க்கும், வேயன்கொடவிலிருந்து களுத்துறை தெற்கிற்கு பகல் 12.25 க்கும், மீண்டும் களுத்துறையிலிருந்து மருதானைக்கு மாலை 3.20 க்கும், அலுத்கமவிலிருந்து மருதானைக்கு இரவு 8.30 க்கும், மருதானையிலிருந்து அலுத்கமவிற்கு முற்பகல் ஒரு மணிக்கும், அவிஸ்ஸாவெல்லவிலிருந்து கொழும்பிற்கு மாலை 8.50 க்கும், கொழும்பிலிருந்து அவிஸ்ஸாவெல்லவிற்கு முற்பகல் ஒரு மணிக்கும், கொழும்பிலிருந்து ரம்புக்கனவிற்கு முற்பகல் ஒரு மணிக்கும் ரயில் சேவைகள் இடம்பெறும்.

மே மாதம் முதலாம் திகதி மருதானையிலிருந்து அலுத்தகமவிற்கும், கொழும்பிலிருந்து அவிஸ்ஸாவெல்லவிற்கும் முற்பகல் ஒரு மணிக்கும் ரயில் சேவை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஆட்சி அமைக்க திரைமறைவில் பேச்சு!!

கட்சி மறு­சீ­ர­மைப்­பால் அதி­ருப்­தி­ய­டைந்­துள்ள ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை இணைத்­துக்­கொண்டு புதிய ஆட்சி அமைக்க சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­ முழு வீச்­சில் ஈடு­பட்­டுள்­ளது என்று அறி­ய­மு­டி­கி­றது.

அதற்­காக சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­கள் சிலர் ஐ.தே.க. அதி­ருப்­தி­யா­ளர்­க­ளு­டன் திரை­ம­றை­வில் இர­க­சி­ய­மா­கப் பேச்சு நடத்தி வரு­கின்­ற­னர். மகிந்த தரப்­பி­ன­ரை­யும் இணைக்க அவர்­கள் முடி­வெ­டுத்­துள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

தமிழ் மற்­றும் முஸ்­லிம் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் சில­ரு­ட­னும் இது தொடர்­பில் பேசப்­பட்டு அவர்­க­ளை­யும் அர­சின் பங்­கா­ளி­க­ளாக இணைத்­துக்­கொள்­வ­தற்கு உத்­தே­சிக்­கக்ப்­பட்­டுள்­ள­தாக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­ச­ரொ­ரு­வர் நேற்­றுத் தெரி­வித்­தார்.

‘‘புதிய ஆட்­சியை அமைப்­ப­தற்கு மகிந்த ராஜ­பக்ச அணி­யில் இருக்­கும் உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வைப் பெற­வும் பேச்சு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அவர்­கள் அமைச்­சுப் பத­வி­க­ளைப் பெறாத பட்­சத்­தில் வெளி­யில் இருந்து ஆத­ரவை வழங்க முடி­யும்’’ என்­றும் அந்த அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

புதிய ஆட்சி அமை­யத் தேவை­யான ஏற்­பா­டு­கள் மற்­றும் தலைமை அமைச்­ச­ராக யாரை நிய­மிப்­பது என்­பன பற்றி அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­மும் ஆலோ­சனை நடத்­த­வுள்­ள­தா­க­வும் அந்த அமைச்­சர் மேலும் தெரி­வித்­தார்.

கூட்­ட­ரசு ஆட்சி அமைக்­கக்­கூ­டாது என்று சு.கவின் பல அமைச்­சர்­க­ளும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் கடு­மை­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். அரச தலை­வர் மைத்­தி­ரி­யி­ட­மும் இது தொடர்­பில் பேசி­யுள்­ள­னர்.

ஆனால் அதற்­குச் சாத­க­மான போக்கு இன்­னும் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. மகிந்த அணி­யும் கூட்­ட­ரசு வேண்­டாம் என்று வலி­யு­றுத்­தி­வ­ரும் நிலை­யில் இந்த நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன.

ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கொள்கை முடிவு

ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு கொள்கை முடிவை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − one =

*