;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (29.04.2018)

0

நாட்டின் பல பகுதகளில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் மழை பெய்யும் வேளை காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தொடர்ந்து மழை பெய்தால் எஹலியகொட, எலபாத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிவு மற்றும் கற்பாறைகள் கவிழும் அவதானம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ​

தொடர்ந்து மழை பெய்தால் எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்னபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கொள்கை முடிவு

ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு கொள்கை முடிவை எடுத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*