;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (29.04.2018)

0

ருவன் விஜேவர்தன குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கொள்கை முடிவு.!!

ருவன் விஜேவர்த்தன குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரவும் கொள்கை முடிவை எடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிராஞ்­­சிக் கட­லில் இந்­திய ரோலர்­கள்

பூந­க­ரிப் பிர­தே­சத்­துக்­குட்­பட்ட கட­லில் இந்­திய ரோலர்­களை நிறுத்தி வைத்­துள்­ள­மை­யால் அந் தப் பகு­தி­யில் தொழில் செய்­ய­மு­டி­யாது 70க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன என்று பூந­க­ரிப் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் மீன­வர்­க­ளால் சுட்­டிக்­காட்­டப் பட்­டது.

கிளி­நொச்சி பூந­க­ரிப் பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் பிர­தேச செய­லக மாநாட்டு மண்­ட­பத்­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­தரன் தலை­மை­யில் இடம்­பெற்­றது . இதன் போது மீன­வர்­க­ளால் குறித்த விட­யம் தொடர்­பில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இலங்­கைக் கடற்­ப­ரப்­பில் அத்­து­மீறி தொழில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் கடற்­ப­டை­யி­ன­ரால் மீட்­கப்­பட்ட இந்­திய ரோலர் பட­கு­கள், பூந­கரி கிராஞ்­சிக் கடற்­ப­ரப்­பில் நிறுத்­தி­ வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தப் பட­கு­கள் நீதி­மன்­றங்­க­ளின் உத்­த­ர­வின் பேரி­லேயே குறித்த இடத்­தில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இத­னால் 70 மீனவ குடும்­பங்­கள் வரை தொழில் புரி­வ­தற்கு பெரும் இடர்­பா­டு­க­ளைச் சந்­தித்­துள்­ள­னர்.

எனவே அந்த ரோலர்­கள் வேறு இடத்­துக்கு மாற்­றப்­ப­ட­வேண்­டும். அவ்­வாறு மாற்­றப்­ப­டும் வரை பாதிக்­கப்­பட்­டுள்ள மீன­வர்­க­ ளுக்கு நட்­ட­ஈ­டு­கள் வழங்­க­வேண்­டும் என்று மீன­வர்­கள் தெரி­வித்­த­னர்.

குறித்த கோரிக்­கையை எழுத்து வடி­வில் தரு­மா­றும், ரோலர்­களை நீதி­மன்­றின் அனு­ம­தி­யு­டன் பொருத்­த­மான பகு­திக்கு மாற்­று­வ­தற்கு பிர­தேச செய­லா­ளர், கடற்­ப­டை­யி­னர் ஊடாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மா­றும் தீர்­மா­னம் எட்­டப்­பட்­டது.

தொட­ருந்­து­டன் மோதி 8 மாடு­கள் உயி­ரி­ழப்பு!!

வவு­னி­யா­வில் தொட­ருந்­து­டன் மோதி 8 மாடு­கள் உயி­ரி­ழந்­தன என்று தெரி­விக்­கப்­பட்­டது. அத­னால் சுமார் 30 நிமி­டங்­கள் தாம­த­மா­கவே தொட­ருந்து பய­ணத்­தைத் தொடர்ந்­தது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

யாழ்ப்பா ­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்கிப் பய­ணித்த கடு­கதி தொட­ருந்து வவு­னியா கொல்­லர்­பு­ளி­யங்­கு­ளம் பகு­தி­யில் சென்று கொண்­டி­ருந்த போதே பிற்­ப­கல் 3 அள­வில் மாடு­க­ளு­டன் மோதுண்­டது.

விபத்தில் அதே­ ப­கு­தியைச் சேர்ந்த ஒரு­வ­ரு­டைய 8 மாடு­கள் உயி­ரி­ழந்­தன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

உணவுப் பொதி, அப்பத்தின் விலைகள் அதிகரிப்பு!!

மதிய உணவு பொதி மற்றும் அப்பத்தின் விலைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 10 ரூபாவாலும், ஒரு சோடி அப்பத்தின் விலை 2 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + twelve =

*