;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (29.04.2018)

0

பாதையை கடக்க முற்பட்ட பெண் பலி

கடுவலை – பத்தரமுல்ல பிரதான வீதியில் கொஸ்வத்த வைத்தியசாலைக்கு முன்னாள் அமைந்துள்ள மஞ்சள் கடவையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஞ்சள் கடவையில் பாதையை கடக்க முற்பட்ட பெண்ணை முச்சக்கர வண்டி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலத்த காயமடைந்த பெண்ணை கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

தலங்கம, சூரிய மாவத்தையை சேர்ந்த 74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிருழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரச வெசாக் மகோற்சவத்தில் ஒருவர் கைது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிங்கிரிய தேவகிரி ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற அரச வெசாக் தின வைபவத்திற்கு வந்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 57 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வு சேவையின் அதிகாரி ஒருவர், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலை அடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் போதும் இந்த நபர் கத்தரி கோலுடன் மண்டபத்திற்கு நுழைய முயற்சித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொழும்பில் இருந்து பிங்கிரிய வரை வந்தமைக்கான காரணத்தை சந்தேக நபர் பொலிஸாரிடம் இதுவரை வெளியிடவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாயம்.!

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, எஹெலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் தினங்களில் அதிக மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் சாத்தியம் உள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில் அறிக்கை!!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

கட்சிப் பொறுப்புக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நியமனம் தொடர்பிலும், கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 9 =

*