;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (30.04.2018)

0

இன்று முதல் காலநிலையில் மாற்றம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்கரமுவ, மத்திய மாகாணங்களில் மாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என, திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகளை அரச மரியாதையுடன் நடத்த ஜனாதிபதி அறிவுருத்தல்

பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகளை அரச மரியாதையுடன் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு அறிவுருத்தியுள்ளார்.

பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உத்தரவு

அநுராதபுரம் விகாரையில் வைத்து பெண்ணொருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

சிவனொளிபாத யாத்திரை காலம் நிறைவு

2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று (30) அதிகாலையுடன் நிறைவடைந்தது.

இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப்பொருட்கள் பௌத்த சம்பிருதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*