;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (30.04.2018)

0

சிவனொளிபாத யாத்திரை காலம் நிறைவு

2017 , 2018 சிவனொளிபாத யாத்திரை காலம் இன்று (30) அதிகாலையுடன் நிறைவடைந்தது.

இதற்கமைவாக சிவனொளி பாதமலையில் வைக்கப்பட்டிருந்த புனிதப்பொருட்கள் பௌத்த சம்பிருதாயத்திற்கு அமைவாக பெரஹர ஊர்வலமாக இன்று காலை 10 மணிக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகள் 2 ஆம் திகதி

காலஞ்சென்ற பிரபல சிங்கள திரைப்பட இயக்குனர், கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக்கிரி​யைகளை அரச அனுசரனையுடன் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெற உள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் காலநிலையில் மாற்றம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு நேரத்தில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்கரமுவ, மத்திய மாகாணங்களில் மாலை வேளையில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என, திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிநீர் போத்தல் நிறுவனங்களை மூட கோரிக்கை

நக்கீல்ஸ் மழைத்தொடரில் இருந்து நீரை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு குடிநீர் போத்தல் நிறுவனங்களுக்கு அரசாங்கம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாது அனுமதி வழங்கியுள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வளர்கள் குற்றஞ் சுமத்தியுள்ளனர்.

மேற்படி நிறுவனங்கள் கட்டுப்பாடின்றி நீரைப் பெற்றுக்கொள்வதனால், நக்கீல்ஸ் மழைக்காடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால்,நக்கீல்ஸ் மழைக்காடுகளின் நீரை நம்பிவாழும் தவலாந்தென்ன கிராம மக்கள் நீர் தட்டுப்பாடால் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

உலக மரிபுரிமைக் காடுகளில் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்து, மேற்படி நக்கீல்ஸ் மழைக்காடுகளின் எல்லையில் அமைந்துள்ள குறித்த இரண்டு குடிநீர் நிறுவனங்களையும் அகற்ற வேண்டும் என அரசாங்கத்திடம் சுற்றுச்சூழல் ஆர்வளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும், அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

’மே தினத்தில் மாற்றம் ஏற்பட பௌத்தத் தலைவர்களே காரணம்’

பெளத்த மதத்தின் முக்கியத் தலைவர்களின் கோரிக்கைக்கு அமையவே, மேதின நிகழ்வுகள், மே 7ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேவகிரி ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“அரசாங்கம் எவ்வாறு மேதினத்தை மே 7ஆம் திகதிக்கு மாற்றியது?” என பல தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பியுள்ள விடயத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − one =

*