;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (30.04.2018)

0

ஆற்றில் குளித்துக்கொண்டிருந்து நபரை காணவில்லை

வலஸ்முல்ல, கெகிரிஓபட ஆற்றில் குளித்துக்கொண்டிருந்து நபரெருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இன்று (30) பிற்பகல் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் வலஸ்முல்ல பொலிஸார் மற்றும் காலி இராணுவத்தினர் ஒன்றாக இணைந்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வலஸ்முல்ல, உடதெனிய பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

வலஸ்முல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா ஒத்துழைப்பு

இலங்கையின் சுகாதார சேவையை மேம்படுத்த கியூபா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

கியூபாவில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜிதசேனாரத்னவை சந்தித்த கியூபாவின் சுகாதார அமைச்சர் ரொபேற்றோ மொராலே இதனைத் தெரிவித்துள்ளார்.

கியூபாவில் உற்பத்தி செய்யப்படும் ஒளடதங்கள், உபகரணங்களை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும் இரு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எப்பாவல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் பதவி நீக்கம்

எப்பாவல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பெண்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகரை பதவி நீக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து சில பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத சிகரட் தொகையுடன் ஒருவர் கைது]

சட்டவிரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து உள்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரட் தொகையிடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவு அதிகாரிகள் கைது செய்யதுள்ளனர்.

இவரிடமிருந்து 33,000 சிகரட்டுக்களை சுங்க பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஊருமீய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + five =

*