;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (01.05.2018)

0

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று ஆனால் இலங்கையில் எதிர்வரும் 7 ஆம் திகதியே மே தினம் கொண்டாடப்படவுள்ளது.

வெசாக் வாரத்தை முன்னிட்டு, மே தினத்தை 7 ஆம் திகதி கொண்டாடுவதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

எதிர்வரும் 7 ஆம் திகதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அரசாங்கத்தினால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்­தில் காய­ம­டைந்­த­வர் உயி­ரி­ழப்பு!!

விபத்து ஒன்­றில் காய­ம­டைந்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்த குடும்­பத்­த­லை­வர் 3 நாள்­க­ளின் பின் நேற்று அதி­காலை சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

ஆவ­ரங்­கால் மேற்கு அச்­சு­வே­லி­யைச் சேர்ந்த 5 பிள்­ளை­க­ளின் தந்­தை­யான கந்­தையா வைகுந்­த­நா­தன் (வயது – 64) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.
கடை­யொன்­றுக்கு கடந்த 27ஆம் திகதி புத்­தூர் நோக்கி துவிச்­சக்­க­ர­வண்­டி­யில் பய­ணித்த அவர் சைக்­கி­ளைத் திருப்ப முற்­பட்ட போது மோட்­டார் சைக்­கிள் ஒன்­று­டன் மோதுண்டு விபத்­துக்­குள்­ளா­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விபத்­தில் வைகுந்­த­நா­த­னும், மோட்­டார் சைக்­கிள் சார­தி­யும் காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வைகுந்­த­நா­தன் கடந்த 3 நாள்­க­ளாக சிகிச்சை பெற்று வந்த நிலை­யில் நேற்று அதி­காலை சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இறப்­புத் தொடர்­பான விசா­ர­ணை­களை யாழ்ப்­பா­ணம் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.

வெசாக் நாளில் மது விற்­றவர் கைது!!

விடு­முறை நாளான நேற்று மது விற்­பனை செய்­யப்­பட்ட இடம் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டுப் பெரு­ம­ள­வான மது­பா­னங்­கள் கைப்­பற் றப்­பட்­டன. அவற்றை விற்­றார் என்ற சந்­தே­கத்­தில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். இந்­தச் சம்­ப­வம் முல்­லைத்­தீவு, புதுக்­கு­டி­யி­ருப்­பில் நடந்­துள்­ளது.

புதுக்­கு­டி­யி­ருப்பு பரந்­தன் வீதி­யில் பொலிஸ் நிலை­யத்­துக்கு அண்­மித்த பகு­தி­யில் இயங்­கி­வந்த மது­பான விற்­பனை நிலை­யத்­தி­லேயே நேற்­றும் மது விற்­கப்­பட்­டது புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸா­ருக்­குத் தக­வல் கிடைத்­தது.

அங்கு சென்ற பொலி­ஸார் தக­வலை உறு­திப்­ப­டுத்­திக் கொண்டு விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் ஒரு­வ­ரைக் கைது செய்­த­னர். விற்­ப­னைக்­குத் தய­ராக இருந்த மது­பா­னங்­க­ளை­யும் கைப்­பற்­றி­னர். அவற்­றின் பெறு­மதி சுமார் 2 லட்­சம் ரூபா என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வெசாக் வாரத்தை முன்­னிட்டு நாடு முழு­வ­தும் மது­பா­னக் கடை­களை மூடு­மாறு அரசு அறி­வித்­தி­ருந்­தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*