;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (01.05.2018)

0

பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் நாளை

நாளைய தினம் பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் நான்காவது அமைச்சரவை திருத்தத்தின் படி புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அதன்படி புதிய அமைச்சர்கள் 18 பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஏனைய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள் இருப்பது போன்றே செயற்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த அமைச்சரவையின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நாளை காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

பூச்செடி போன்று கஞ்சா செடி வளர்த்தவர் கைது

பூ செடிக்கு பதிலாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகக்லை தோட்ட பகுதியில் வீடொன்றில் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் பூச்செடி வளர்க்கும் சாடியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார்.

சுமார் இரண்டு அடி உயரமான கஞ்சா செடிகள் மூன்றை இன்று (01) மதியம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து தலவாக்கலை பொலிஸாரினால் சுற்றவளைப்பு செய்யப்பட்ட போது, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா செடிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை வழக்கு பதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி, விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி செயலகத்தில்

அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், முன்னாள் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவும் ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே ஜனாதிபதியும் முன்னாள் நீதியமைச்சரும் அங்கு சென்றுள்ளனர்.

கத்தி வெட்டுக்காயங்களுடன் மாணவி வைத்தியசாலையில் அனுமதி

கத்தி வெட்டுக்காயங்களுடன் மாணவியொருவர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மறே, நூக்குவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 16 வயதான தேவிகா நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பயிலும் மாணவியே கத்தி வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், மஸ்கெலியா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 3 =

*