;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (01.05.2018)

0

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத்திகதி

இம்முறை கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி எதிர்வரும் 15ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்ப படிவத்தைத்தை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தாமதமாக கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதால், குறித்த தினத்திலோ அல்லது அதற்கு முன்னரோ பரீட்சைக்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் பெயரில் உதாகம்மான கிராமம்

இலங்கை சினிமா துறைக்கு பெரும் பங்காற்றிய கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை கௌரவிக்கும் வகையில் மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

திஸ்ஸமஹாராம புல்பல்லம என்ற கிராமத்தில் அமைக்கப்படும் உதாகம்மான என்ற திட்டத்திற்கே லெஸ்டர் ஜேம்ஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் மறைவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது கடந்த சனிக்கிழமை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்த கிராமத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார்.

லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் என்ற இந்த கிராமம் உதாகம்மான வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள 700 ஆவது கிராமமாகும். இது ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைக்கப்படும் 133 ஆவது உதாகம்மான எழுச்சி கிராமமாகும்.

இதேவேளை திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் அமைக்கப்படும் 65 உதாகம்மான கிராமம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வறுமையிலுள்ள குடும்பங்களுக்காக நாடு முழுவதும் 50 உதாகம்மான கிராமங்கள் அமைக்கப்படவுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கம் 600 கோடி ரூபாவை இந்த திட்டத்திற்காக வழங்கியுள்ளது.

இலங்கை வரும் சேர்பிய துணை பிரதமர்

சேர்பியாவின் துணை பிரதமர் ஈவிசி டாசெக் ஒரு வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சேர்பியா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேர்பியாவின் முதலாவது துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரான ஈவிசி டாசெக் நாளைய தினம் இலங்கை வரவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவர் இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்.

நாடுகளுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் பல ஒப்பந்தங்களையும் ​செய்துக்கொள்ள சேர்பிய பதில் பிரதமர் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

லசந்த படுகொலை; சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

’உமா ஓயா’ இழப்பீடுக் கோரும் வழக்கு ஒத்திவைப்பு

உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, பதுளை மேல் நீதிமன்றத்தினால், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உமாஓயா திட்டத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினால் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும், இழப்பீட்டு நிதியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும், குறிப்பிட்டு இந்த வழக்குத் தாக்கதல் செய்யப்பட்டுள்ளது.

பதுளை மேல்நீதிமன்றத்தில் நீதிபதி துசித்த தேசப்பிரிய குணசேகர முன்னிலையில் நேற்றைய தினம் (01) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக, உமா ஓயா திட்டபணிப்பாளர் பி.பி.அமரசேக்கர, பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் நிமால் அபயசிரி, சுற்றுச் சூழல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, ஊவா மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஏ.பி.எம்.விஜயதுங்க ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உமாஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னணி சார்பில் ஊவா மாகாண சபையின், ஜே.வி.பி உறுப்பினர் சமந்த வித்தியாரட்ண, முன்னணியின் தலைவர் எய்ச்.ஏ.போதிபால, செயலாளர் வசந்த சன்ஜீவ சோமசிரி ஆகியோரினால் இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + sixteen =

*