;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (01.05.2018)

0

17 வயதான யுவதியொருவரின் சடலம் மீட்பு

ஏறாவூர் – தாமரைக்கேணி தக்வாப் பள்ளியை அண்டியுள்ள வீடொன்றிலிருந்து யுவதியொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கிராமத்தில் வசிக்கும் 17 வயதான யுவதியொருவரின் சடலமே கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய அமைச்சரவையில் நம்பிக்கையில்லை..!

புதிய அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லை. இந்த அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நாட்டிலுள்ள பிரச்சினை ஏதுவும் தீரப்போவதுமில்லை. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே இவ்வாறன விடயங்களை அரசாங்கம் மேற்கொள்கிறது. ஆகவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி வேண்டிக்கொண்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.

இந்த செடியை வளர்த்து வந்த நபர்கள் கைது.!

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தோட்டம் மற்றும் கட்டுக்கலை தோட்டம் ஆகிய இரு பகுதிகளில் வீட்டு முற்றத்தில் மற்றும் வீட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர்கள் இருவர் தலவாக்கலை பொலிஸாரால் நேற்று ஒருவரும், இன்று ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டுள்ளனர். இதன்போது தலவாக்கலை தோட்ட பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் 6 கஞ்சா செடிகளும், கட்டுக்கலை தோட்டப்பகுதியிலுள்ள வீட்டு முற்றத்தில் பூச்செடியில் வளர்த்த வந்த 2 கஞ்சா செடிகளையும் இவ்வாறு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் தங்களது வீட்டு முற்றத்திலும், தோட்டத்திலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் இச்செடிகளை வளர்த்து வந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு அடி உயரமான கஞ்சா செடிகளையும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரை இன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதோடு, நாளை ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏறாவூரில் டெங்குப் பரிசோதனை!!

டெங்கு உற்பத்தியாகக் கூடிய சூழலை இனம் காணும் சோதனை நடவடிக்கைகள் ஏறாவூரின் பல முக்கிய இடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்டன.

ஏறாவூர் பொலிஸ் நிலைய கட்டிடம், பொலிஸார் தங்கும் விடுதிகள், வாகனங்கள் மற்றும் படகு தோணிகள் நிறுத்துமிடங்கள், ஏறாவூர் தனியார் கூட்டுறவு வைத்தியசாலை உள்ளிட்ட இடங்கள் பரிசோதிக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 20 =

*