;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (02.05.2018)

0

ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும்

ஆட்சியாளர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

ஆட்சியாளர்களின் செயலால் மக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கும், அநீதிகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நேற்று (02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவரின் உயிரை பறித்த கோர விபத்து!

மினுவங்கொடை நிட்டம்புவ பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.இன்று மாலை 6மணியளவில்இடம்பெற்றஇந்தவிபத்தில்ஒருவர்காயமடைந்தநிலையில்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.வீதியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டியொன்று பேரூந்தொன்றில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , அதன் சாரதி படுகாயமடைந்த நிலையில் மினுவங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 47 மற்றும் 58 வயதுடைய இருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

க.பொ.த. (சா/த) மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!!

எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள், ஏற்றுக் கொள்ளப்படும் திகதி எதிர்வரும் மே 15 உடன் நிறைவடைகின்றது.

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் மே 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை குறித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளதோடு, அதற்கு பின்னர் அல்லது தாமதமாகும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதால் உரிய தினத்தில் அதற்கு முன்னர் கிடைக்குமாறு விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

அது தொடர்பான விண்ணப்பங்களை தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கான விண்ணப்பம் ஏப்ரல் 24 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அந்தந்த பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளதோடு, இது வரை இவ்விண்ணப்பங்கள் கிடைக்கவில்லையெனின் திணைக்களத்தின் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளைக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + 2 =

*