;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (02.05.2018)

0

நீதித்துறை மூலம் தீர்ப்புகளை வழங்குவதில் தாமதம்

இலங்கையில் நீதித்துறை மூலம் தீர்ப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊழலில் ஈடுபடுகின்ற அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கவும் இதன் மூலம் தாமதம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் நாளை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

புதிய களனி பாலத்தில் போக்குவரத்துக்கு தடை ஏற்படலாம்

எதிர்வரும் 03ம் திகதி முதல் 05ம் திகதி வரையான நாட்களில் புதிய களனி பாலத்தின் மீதான போக்குவரத்து இடைக்கிடை தடைப்படலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பாலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே அந்தப்பாதையிலான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − 1 =

*