;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (02.05.2018)

0

கிளைபோசெட் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் செய்கைகளுக்கு கிளைபோசெட் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை இன்று (02) முதல் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாக்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

இலங்கையின் தேயிலை ஏற்றுமதிக்கு சீனாவினால் கட்டுப்பாடு விதிக்கப்படும் அபாயம் இருப்பதால் இந்த தடை நீக்கப்படுவதாக அவர் கூறினார்.

வௌிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்கள் அவதானம்

சமுக வலைத்தளங்கள் ஊடாக வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களிடம் மோசடியில் ஈடுபடுகின்ற குழுவொன்று சம்பந்தமாக அறியக் கிடைத்துள்ளதாகவும், இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு தொழிலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு என்று பல்வேறு பெயர்களில் இந்த கும்பல் இயங்குவதாக தெரிய வந்துள்ளது.

வௌிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களை சமுக வலைத்தள குழுக்களில் இணைத்துக் கொண்டு, பல்வெறு திட்டங்களுக்கு பணம் சேகரிப்பதாக கூறி இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த மோசடி சம்பந்தமான தகவல்கள் தெரிந்தால், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் சட்ட விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளரிடம் முறையிடுமாறும், முறையீட்டாளரின் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

சில பிரதேசங்களில் உஷ்னமான காலநிலை

வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் உஷ்னம் அதிகரிக்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறு உஷ்னமான காலநிலை காணப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

அதேநேரம் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரையோரபகுதிகளில் காலை வேளையில் மழைபெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்கபளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலின்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு ளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கம்

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த, கிளைபோசெட் பாவனைத் தடை நீக்கப்பட்டுள்ளதாக, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் அடுத்த வாரமளவில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் ஏனைய விவசாய உற்பத்திகளுக்கான, கிளைபோசெட் பாவனைத் தடை தொடருமெனவும் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + one =

*