;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (03.05.2018)

0

விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று இன்று நடத்தப்பட உள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

இந்தக் கூட்டம் இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறுகிறது.

சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை இன்று நடத்த தீர்மானித்ததாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.

புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் நாளை நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

எதிர்வரும் 08ம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் கூறினார்.

அஞ்சலதிபர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த அஞ்சலதிபரொருவர் பண மோடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றி வந்த நிலையில், வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபரே எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலம் பெறவும் : கல்கிசை நீதிவான்

ஊடகவியலாளர் கீத்நொயர் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் சரத்பொன்சேகாவிடம் வாக்குமூலமொன்றை பெறுமாறு கல்கிசை நீதிவான் லோச்சன அபயவிக்கிரம இலங்கையின் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கீத்நொயர் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவேளை நீதிவான் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு எதிராகவே ஆரம்பத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால் அவரையும் விசாரணை செய்யவேண்டும் கீத்நொயர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும் சரத்பொன்சேகாவின் வாக்குமூலத்தை ஏற்கனவே தாங்கள் பெற்றுக்கொண்டுவிட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சரத்பொன்சேகாவை மேலும் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்தே தேவைப்பட்டால் சரத்பொன்சேகாவின் வாக்குமூலத்தை பெறுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 8 =

*