;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (03.05.2018)

0

அரசாங்கத்தின் கொள்கை மீது விவாதம் நடத்த தீர்மானம்

எதிர்வரும் 10 ஆம் திகதி அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீது பாராளுமன்ற விவாதம் நடத்துவதற்கு, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (03) இடம்பெற்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

இந்த அறிக்கை எதிர்வரும் 08ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பத்தின் போது அரசாங்கத்தின் கொள்கை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்ற உள்ளார்.

இந்த அரசாங்கத்தின் கொள்கை மீது விவாதம் ஒன்றை நடத்துமாறு கூட்டு எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததாக தினேஷ் குணவர்தன கூறினார்.

இன்று மாலை மழை பெய்யலாம்

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை (04) முதல் அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அனுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரப் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என்றும் இடி மின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிசயமான வாழைக்குலை..!!

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரு வாழைக்குலையில் மூன்று வாழை பூக்கள் பூத்து அதிசயம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் பத்தனை குயின்ஸ்பெரி கீழ்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

10 முதல் 12 அடி உயரத்திலான இந்த வாழைமரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூவுள்ளது சிறப்பம்சம்.

இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.

ஹப்புத்தளையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம்

ஹப்புத்தளை – ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வல்லப்புதென்ன வழியாக கிரிமிட்டிய செல்லும் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கினிகந்கல, கிரிமிட்டிய மற்றும் களுப்பான ஆகிய ஊர்களுக்கு செல்லும் வழி தடைப்பட்டுள்ளது.

கடும் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் சுமார் 360 குடும்பங்களின் போக்குவரத்து வசதிகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களாக குறித்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு வருவதாகவும் நேற்றும் இன்றும் மண் சரிவு அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

மண் சரிவு மேலும் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + twenty =

*