;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (03.05.2018)

0

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்க விசேட வேலைத்திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வகையில் அனைத்து கிராம உத்தியோகத்தர், பிரிவுகளிலும் மூவர் வீதம் தெரிவு செய்து அவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கும் திட்டமொன்றை முன்னெடுக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கிராம மட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர்களை அடையாளங்கண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி எச்.எம். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய ரீதியில் சிறுவர் பாதுகாப்பு படையணியொன்றை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் மீதான கரிசனை குறைவடையும்போது, அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக கள்ளு விற்ற இருவர் கைது

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து 8 போத்தல் கள்ளு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர தொலைபேசி அழைப்பினூடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி பீ.ஸ்.பீ.பண்டாரா தலைமையிலான குழுவினார் சென்ற போது, ஒந்தாச்சிமடத்தில் சனநடமாட்டம் அற்ற பிரதேசத்திலேயே குறித்த சட்டவிரோத கள்ளு விற்பனை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், குறித்த இருவரையும் கைதுசெய்ததாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த இருவரும் நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை அவர்கள் இருவரும் பிணையில் செல்வதற்கும் மீண்டும் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

மேல் மாகாணம்,சப்ரகமுவ மாகாணம்,மத்திய மாகாணம்,வடமேல் மாகாணம் மற்றும் தெற்கு மாகாணத்திலும் இன்று கடுமையான இடி,மின்னல் தாக்கங்கள் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதன்போது காற்றின் வேகமும்,70-80 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் வீடுகளிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இடி, மின்னல் தாக்கங்களின்போது பொதுமக்கள் மரத்தின் கீழ் நிற்பது, தொலைபேசிப் பாவனை, என்பவற்றை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்,மோட்டார் சைக்கள்,பைசிக்கள்,ட்ரக்டர் மற்றும் படகுகளில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெங்காயம், உருளைக் கிழங்குக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றுக்கான விஷேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான வரி 40 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*